ரூ.1 லட்சம் தரும் திட்டம்.. சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது.. இதுதான் கடைசி நாள்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட, 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கான சிறப்பாக பங்காற்றும், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

காசோலை: அந்த வகையில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு உள்ளிட்ட செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு, ஜன.,24ல் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படுகிறது.. இந்நிலையில், இந்த வருடமும் இதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது:
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாகப் பங்காற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜன.24-ல் மாநில அரசின் விருது வழங்குவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.
குழந்தை திருமணம்: பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைகள் திருமணத்தைத் தடுக்கவும், பெண் கல்விக்கு பாடுபட்ட, வீர தீர செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜன.24-ல் பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனம் தகுதியுடைய 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைக் கண்டறிந்து, பரிந்துரை செய்து சென்னை ஆட்சியர் அலுவலகத்துக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும்.
இதுதான் நாள்: இவ்விருதுக்கு http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கையேடு தயாரிப்பு குறித்த விளக்கம் மற்றும் படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அக்.3-ம் தேதி 4மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
கொலையாளி: திரிபுராவைச் சேர்ந்த மகாலட்சுமி, கடந்த 5 மாதங்களாகத்தான் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தாராம்.. அக்கம்பக்கத்தினருடன் யாருடனும் பழகியதில்லையாம்.. பேசியதும் இல்லையாம். கொலை செய்த சஞ்சய், ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கியிருக்கவே ஓடியிருக்கிறார். ஆனால், மீடியாக்களில் வந்த செய்திகளை கண்டு, போலீசுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. கடந்த புதன்கிழமை, பைக்கில் சென்றதை அந்த பகுதி மக்களும் பார்த்துள்ளனர்.
மகாலட்சுமி கடைசியாக செப்டம்பர் 1 முதல் அவர் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டாராம்.. மறுநாள் செப்டம்பர் 2 அல்லது 3ம் தேதி அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications