தரித்திரம் நீங்க.. வறுமை அகல.. பைசா செலவில்லாமல் எளிய பரிகாரங்கள்.. வீட்ல பாசி பருப்பு இருக்கா? செம
சென்னை: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும்போதும், குடும்பத்தை வறுமை ஆட்கொண்டுள்ள போதும், சில எளிய பரிகாரங்களை செய்துவரும்போது, அதிலிருந்து நாம் மெல்ல மெல்ல விடுபட்டு மீண்டு வரலாம். இதுகுறித்து ஆன்மீகத்தில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிம்மதி என்பதே இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகரும்.. சொல்ல முடியாத அளவுக்கு மனஉளைச்சலுக்கும் ஆளாகிவிடுவார்கள்.

இப்படி சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள், ஒரு கைப்பிடி பாசிபருப்பை வைத்து பரிகாரமாக செய்யலாம. இதற்கு பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி, வெல்லம் ஒரு கைப்பிடி என இரண்டையுமே ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை இந்த ஊறிய பாசி பருப்பை பசு மாட்டிற்கு, உங்கள் கையாலேயே தந்துவிட்டு, கடனிலிருந்து விடுபட வேண்டும் என்று கோமாதாவிடம் மனஉதார பிரார்த்தித்தால், கடனிலிருந்து மீண்டுவர முடியும்.
பச்சரிசி: அல்லது ஒரு கைப்பிடி பச்சரிசியை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சர்க்கரை, வாழைப்பழம் கலந்து பசுவிற்கு தந்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்,,
அதேபோல, வெள்ளிக்கிழமைகளில், அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், மிளகு, கடுகு, சீரகம், மஞ்சள், எண்ணெய், நெய், சர்க்கரை, காய்கறிகள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் வரிசையாக வைத்து பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். இதனால், இந்த மளிகை பொருட்கள் குறைவில்லாது வற்றாது நிறைந்திருக்கும்.
மருதாணி இலைகள்: வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இல்லாவிட்டாலும், செயற்கையாக அமைத்து கொண்டால் பண புழக்கம் உயரும் என்பார்கள்.. அதேபோல, வீட்டு வாசலில் மருதாணி இலைகளை கொத்தாக தொங்க விடலாம்.
இரவு தூங்க செல்லும்போது, தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துக்கொண்டு படுக்க வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் தூங்கி எபம்போது, உங்கள் மனச்சோர்வு, மனஅழுத்தம், மனகுழப்பம் அனைத்தும் நீங்கியிருக்கும். அந்த டம்பளரிலுள்ள தண்ணீரை காலையில் எழுந்ததுமே மரத்திற்கோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ ஊற்றி விடலாம்.
செல்வம் : பூஜையறையில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி வைத்திருக்க வேண்டும். இந்த நீரில், சிறிது பச்சை கற்பூரம், லவங்கம், துளசியையும் போட்டு வைக்கலாம். இந்த தண்ணீர் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டதாம்.. மேலும் இதே நீரில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும்போது இறைசக்தி கூடும் என்பது நம்பிக்கையாகும். மறுநாள் இந்த நீரை கீழே கொட்டிவிடாமல், நாம் குடிக்கலாம்.. அல்லது சமையலறை, பீரோ வைக்கும் அறைகளில் தெளித்து விடலாம். இதனால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கும்.
அதேபோல, ஒரு சிவப்பு துணியில், கொட்டைப்பாக்கு, பச்சரிசி, குங்குமம் இந்த 3 பொருளையும் சேர்த்து வைத்து முடிச்சு போல கட்ட வேண்டும். இதனை, யாரும் தொடாதவகையில், பூஜையறையில் வைத்துவிட வேண்டும்.
தரித்திரம்: ஒரு வருடம் கழித்து, இந்த முடிச்சை ஓடும் ஆற்றிலோ அல்லது கடலிலோ போட்டு விடவேண்டும். இதனால், உங்களை பிடித்துள்ள தரித்திரம், சாபம், தீய சக்தி அனைத்துமே விலகிவிடும்.. ஆறு, கடலில் போட முடியாமல் இருந்தால், ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் தூரமாக போட்டுவிடலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications