இந்தியாவுக்கு பதில் பாரத்? அதெப்படி விட முடியும்? RSS மீது சந்தேகம் கிளப்பும் கனிமொழி எம்.பி.!
சென்னை: இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு இயற்றுகிறதா அல்லது ஆர்.எஸ்.எஸ். இயற்றுகிறதா என கனிமொழி எம்.பி. சந்தேகம் எழுப்பியுள்ளார்.
பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ் வந்து இதுவரை பார்த்ததில்லை என்றும் இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார் என்றும் இந்தச் சூழலில் இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் பல கேள்விகள் எழுவதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் நாடோடிப் பழங்குடிகள் நிலை ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும்,
தமிழக அரசு என்பது எல்லோருக்குமான அரசு என்றும் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் வழியில் செயலாற்றக் கூடிய அரசு தமிழ்நாடு அரசு எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
இது தமிழ்நாடு மாடலாக மட்டும் முடிந்து விடாமல், இந்திய அளவிலே, நிச்சயமாக நாடாளுமன்றத்திலும் இது பற்றி பேசுவோம் என்றார். தற்போது இந்தியா என்று சொல்ல வேண்டுமா? இல்லையா? என்று பல குழப்பங்கள் உருவாகி வருவதாகவும் நமக்கு எப்போதும் இந்தியா தான் எனவும் கனிமொழி பேசினார்.

மேலும், இந்தியா பெயர் விவகாரம் பற்றி (As an Indian, I will definitely raise it in Indian Parliament) ஒரு இந்தியன் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன் என்றும் கனிமொழி பேசினார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications