தமிழகம் உட்பட.. 14 மாநிலத்திற்கு நேரடியாக விற்கப்படும் கோவாக்சின்.. விற்பனையை தொடங்கிய பாரத் பயோடெக்
சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு கோவாக்சின் மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் நேரடியாக விற்பனை செய்ய தொடங்கி உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வேக்சினுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்து வரும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வேக்சின் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
முதல் டோஸ் பெற பதிவு செய்வதர்களுக்குபல மாநிலங்களில் வேக்சின் கொடுக்க முடியவில்லை. இல்லையெனில் முதல் டோஸ் கொடுத்தவர்களுக்கு இரண்டாம் டோஸ் கொடுக்க முடியவில்லை. மத்திய அரசு போதுமான வேக்சினை ஒதுக்கவில்லை, இதனால் வேக்சின் போட முடியவில்லை என்று மாநில அரசுகள் புகார் அளித்து வருகின்றன.

வெளிநாடு
அதிலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின், கோவிட்ஷீல்ட் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்சின் மருந்தை நேரடியாக மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தொடங்கி உள்ளது. மத்திய அரசுக்கு வேக்சின் கொடுத்து, அதை மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுத்தது போல் இல்லாமல் நேரடியாக மாநில அரசுக்கு கோவேக்சினை பாரத் பயோடெக் விற்பனை செய்ய தொடங்கி உள்ளது.

பாரத் பயோடெக்
நேரடி வேக்சின் விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, கடந்த மே 1ம் தேதியில் இருந்து பாரத் பயோடெக் இந்த மருந்தை மாநிலங்களுக்கு நேரடியாக கொடுக்க தொடங்கி உள்ளது. அதே சமயம்மத்திய அரசு அறிவித்த வேக்சின் ஒதுக்கீட்டு விதிமுறைகளை பின்பற்றியே மாநிலங்களுக்கு வேக்சின்களை பாரத் பயோடெக் வழங்கி வருகிறது. மொத்தம் 14 மாநிலங்களுக்கு, அவர்கள் கொடுத்த ஆர்டரை முன்னிட்டு முதல் கட்டமாக நேரடியாக பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சினை வழங்க தொடங்கி உள்ளது.

நேரடியாக வழங்குகிறது
அதன்படி ஆந்திர பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், குஜராத், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கோவாக்சின் மருந்தை முதல் கட்டமாக பாரத் பயோடெக் ஏற்றுமதி செய்கிறது. மற்ற மாநிலங்கள் பலவும் பாரத் பயோடெக்கிடம் வேக்சின் கேட்டு கோரிக்கை வைத்துள்ளன.

ஆனால் என்ன?
ஆனால் இந்த மாநிலங்களுக்கு வேக்சின் அனுப்புவது பற்றி போக போக முடிவு எடுக்கப்படும், வேக்சின் கையிருப்பை பொறுத்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என்று பாரத் பயோடெக் கூறியுள்ளது. இந்த வேக்சின் 14 மாநிலங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டாலும், மத்திய அரசு நிர்ணயித்த வேக்சின் ஒதுக்கீட்டு முறையை பின்பற்றியே வேக்சின்களை பாரத் பயோடெக் நிறுவனம் வேக்சினை வழங்கி வருகிறது.

எவ்வளவு
முதலில் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கு விற்கப்ய்ட்டாலும், மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கு ஒரு டோஸ் விற்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இது மக்களிடையே கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. இதையடுத்து தற்போது இதன் விலை 400 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications