நெத்தியில் பட்டை.. கழுத்தில் கொட்டையுடன் இருக்காரே.. இவர்தான் ரவி சர்மா.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பரதநாட்டிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: இதோ நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையும் அணிந்திருக்கிறாரே.. இந்த பரதநாட்டிய வாத்தியார்தான் பச்சபுள்ளைக்கு பாலியல் தொல்லை தந்தவர்.. இப்போது போக்சோவில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.
ஆவடி அடுத்த கிறிஸ்து காலனியை சேர்ந்தவர் ரவிசர்மா. இவருக்கு பாலசுப்பிரமணியம் என்று இன்னொரு பெயர் உண்டு. 53 வயதாகிறது.
இவர் ஒரு பரதநாட்டிய ஆசிரியர்.. தன் வீட்டிலேயே 6 வருஷமாக பரத நாட்டிய ஸ்கூல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்த பள்ளியில், அவர் தெருவை சேர்ந்த 11வயது சிறுமி ஒருத்தி டான்ஸ் கற்று கொள்கிறாள்.

சிறுமி
இந்நிலையில் போன வாரம் அதாவது 29ந்தேதி பரதநாட்டிய கிளாசுக்கு வழக்கம்போல சிறுமி சென்றிருக்கிறாள். அப்போது ரவிவர்மா சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. கிளாஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததுமே சிறுமி இதை பற்றி தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளாள்.

முற்றுகை
மேலும், இனிமேல் டான்ஸ் கிளாசுக்கு போக மாட்டேன் என்றும் சொல்லி இருக்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், 50க்கும் மேற்பட்டோருடன் அந்த பரதநாட்டிய பள்ளியை முற்றுகையிட்டனர். பிறகு ரவிசர்மாவுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

புகார்
விவகாரம் பெரிதானது.. தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விரைந்து வந்தனர்.. பொதுமக்கள் பிடியிலிருந்து ரவிசர்மாவை மீட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர், சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் துணை கமிஷனரிடம் புகார் தந்ததையடுத்து, ஆவடி அனைத்து மகளிர் போலீசுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கைது
அவர்கள் இதை பற்றி விசாரித்ததில், ரவிசர்மா சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவிசர்மாவை கைது செய்து திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிறகு புழலில் அடைத்தனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications