சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: பாரதியார், பெரியார் ஆகியோர் மொழி எல்லைக்குள் நிற்கவில்லை என்று சென்னை இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தெரிவித்துள்ளார்.

சென்னை தக்‌ஷின பாரத் இந்தி பிரச்சார சபாவில் மகாத்மா காந்தி சிலையை குடியரசுர் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பின்னர், அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழ்நாடு மிக அழகிய மொழி, செம்மையான கலாச்சாரம், திறமையுடன் கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது என்றார்.

Bharathiar, Periyar are not stand in the language limits. President Speech in Chennai

மேலும், டெல்லியில் வட இந்திய குழந்தைகள் தமிழ் படிப்பதை பார்த்துள்ளேன் என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் பிற மொழிகளையும் கற்பது இணக்கத்திற்கு உதவும் எனவும் கூறினார்.

முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை காலை 8.15 மணியளவில், ஹெலிகாப்டர் மூலம் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று, சுவர்ண பாரதி அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.

English summary
President Ramnath govind Speech in Chennai: Bharathiar, Periyar are not stand in the language limits
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X