Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைவாசிகளே.. நாடு முழுவதும் மெட்ரோ, ரயில், பஸ்களில் பயணிக்க இனி ஒரே அட்டை – புதிய திட்டம் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிப்பதற்கு வசதியாக. புதிதாக தேசிய பொது இயக்க அட்டையின் மூலம் சிங்கார சென்னை அட்டையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் உள்ள ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால், இனி வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய தேவையே கிடையாது..

'சிங்கார சென்னை' என்ற பெயரில், இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் நேற்றைய தினம் அறிமுகம் செய்து வைத்தார்.

BIG announcement and introduction of Singara Chennai card and how to use singara chennai card

இந்த நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, அர்ச்சுனன், பிரசன்ன குமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒரே அட்டை: புதிய அட்டையை பயன்படுத்துவதற்கும், அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கும் https://transit.sbi/swift/customerportal? pagename=cmrl என்ற பிரத்யேக இணையதளத்தையும் பாரத ஸ்டேட் வங்கி துவக்கி உள்ளது. இந்த அட்டைகான இருப்புத் தொகையை, பணம் மூலமாகவும், ஆன்லைன் வங்கி சேமிப்பு கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.. முதல்கட்டமாக, கோயம்பேடு, சென்ட்ரல், விமான நிலையம், உயர்நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம், கிண்டி ஆகிய ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களில், இந்த தேசிய பொது இயக்க அட்டை வழங்கப்படும்.

பஸ்கள், எலக்ட்ரிக் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகிய 3 பயணங்களுக்கும் இந்த ஒரே கார்டை பயன்படுத்த முடியும்.. சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்டவற்றுக்கு...பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம். சென்னை மட்டுமின்றி, நாடு முழுவதும் இது பயன்பாட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்படும்..
ஆனால் இந்த திட்டம் இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால், இப்போதைக்கு இந்த அட்டையை வைத்து மெட்ரோவில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

சபாஷ் அறிவிப்பு: அடுத்த 2 மாதத்தில் புறநகர் ரயிலில், இது முழுமையாக கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.. புறநகரில் தவிர்த்து சென்னை மாநகரப் பேருந்துகளில் கொண்டு வருவதற்கு இன்னும் 10 மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.. இந்த 10 மாதத்திற்குள் இதற்கு தேவையான கருவிகளை வாங்கிய பிறகு இந்த அட்டையை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

இந்த அட்டையை ஏப்ரல் 17-2023 முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெறலாம். குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்து அட்டையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மெட்ரோவோ, லோக்கல் ரயிலோ அல்லது பேருந்தோ அங்கு பொருத்தப்பட்டிருக்கும் மெஷினில் ஸ்வைப் செய்தால் பயணத்துக்கான கட்டணம் எடுத்துக்கொள்ளபடும். இதற்காக டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்க தேவையில்லை. கார்டில் உள்ள பணம் காலியானதும் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

BIG announcement and introduction of Singara Chennai card and how to use singara chennai card

அட்டைகள்: இந்த அட்டையை சென்னை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த ஒரு மெட்ரோவுக்கும் பயன்படுத்த முடியும்.. இதுபோக,சிங்காரச்சனை அட்டையை டெபிட் கார்டு ஆகவும் பயன்படுத்த முடியும். எஸ்பிஐ வங்கியுடன் கணக்கு வைத்துள்ளார்கள் இதனை டெபிட் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்...இந்த அட்டையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கும், வாலட் வசதியுடன் சேர்த்து அதிகபட்சமாக 2000 ரூபாய் சேமிக்க முடியும்.

புதிய அட்டையை பயன்படுத்துவதற்கும் மேலும் அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கும் பிரத்யேக இணையதளத்தை (https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl) பாரத ஸ்டேட் வங்கி கொண்டுள்ளது. இந்த அட்டைக்கான இருப்புத்தொகையை பணம் மூலமாகவும் ஆன்லைன் வங்கி சேமிப்பு கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். சிங்கார சென்னை அட்டையின் முக்கிய அம்சங்கள் (1) இந்த அட்டை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. (2) இந்த அட்டையை இந்தியாவின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தலாம். (3) குறைந்தபட்ச KYC உடன் எளிதான பதிவு செயல்முறை ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+