சரவெடி கொளுத்திய ஸ்டாலின்! மேயருக்கு ரூ.30000.. கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் இனி மதிப்பூதியம்! செம!
சென்னை: மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்கள் பணியில் ஈடுபடும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வரின் இந்த அறிவிப்பு உற்சாக டானிக்காக அமைந்துள்ளது.
மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கல் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளைச் சிறப்பித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 மதிப்பூதியம் வழங்கப்படும். துணை மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 மதிப்பூதியம் வழங்கப்படும். மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.

அதேபோல, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் 15,000, துணைத் தலைவர்களுக்கு ரூ. 10,000, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5000 மதிப்பூதியமாக வழங்கப்படும். பேரூராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் 10,000, துணைத் தலைவர்களுக்கு ரூ. 5000, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2500 மதிப்பூதியமாக வழங்கப்படும்.
இந்த மதிப்பூதியம், முழு நேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம் ஜூலை மாதம் முதலே வழங்கப்படும் என்றும் முதல்வர் உத்தரவின்பேரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications