Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சர்ப்ரைஸ்" தந்த ஸ்டாலின்.. கோட்டையில் கொடியேற்றியதுமே அதிரடி.. சென்னையில் "விடுதலை நாள் மியூசியம்!"

கோட்டையில் கொடியேற்றி வைத்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறித்து கொள்ளும் வகையில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் வசப்பட்டு இருந்த இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது..நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் ஆகும் நிலையில் இன்று சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

    75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.. தேசியக் கோடியை ஏற்றிய தலைவர்கள் *Tamilnadu | Oneindia Tamil

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி, முன்னதாகவே அழைப்பு விடுத்திருந்தார்.

    நினைவிடம்

    நினைவிடம்

    பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இன்றைய சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்.. அதேபோல, 76-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். முன்னதாக, கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும், காவல்துறையின் மரியாதையையும் முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

    கருணாநிதி

    கருணாநிதி

    தொடர்ந்து மாநில விருதுகளை முதல்வர் வழங்கினார். அப்போது, தகைசால் தமிழர் விருதை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவுக்கு ஸ்டாலின் வழங்கினார்.. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய சுதந்திர தின உரையாற்றினார்.. அப்போது, "விடுதலை முழக்கத்தை எழுப்பிய முதல் மண் தமிழ் மண். சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள். முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள்" என தமிழகத்தின் பெருமைகளை ஸ்டாலின் சொல்லியபோதெல்லாம் கூடியிருந்த மக்கள் கைகளை தட்டி கரகோஷம் எழுப்பினார்கள்..

    சர்ப்ரைஸ்

    சர்ப்ரைஸ்

    மேலும், தன்னுடைய உரையில் முதல்வர் சிறப்பு அறிவிப்புகளை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.. குறிப்பாக, அரசு ஊழியர்கள், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்புகளையும் வெளியிட்டார்.. அதில், "தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும். ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் பேர் பயன்பெறுபவர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 18 ஆயிரத்திலிருந்து ரூபாய் இருபதாயிரமாக உயர்த்தப்படுகிறது.

     டெக்னாலஜி

    டெக்னாலஜி

    அதே போன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது... சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றலுக்கான சிறப்பு மாத ஓய்வூதியமும் ஒன்பதாயிரத்திலிருந்து ரூபாய் பத்தாயிரமாக உயர்த்தப்படுகிறது. இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறித்து கொள்ளும் வகையில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்பதை பெருமிதம் பொங்க இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த நாளில் அறிவிக்கிறேன்" என்றார் முதல்வர் முக ஸ்டாலின்..

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+