பெரிய மெசேஜ்.. டாஸ்மாக் சொன்னதை கேட்டீங்களா? மதுக்கடைகளில் இந்த டைம் நோட் பண்ணுங்க.. சூப்பர் அதிரடி
சென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன அது?
வருகிற ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளது.. எனவே, நேற்று முன்தினம் முதலே தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.

பல இடங்களில் அரசியல் கட்சிகள் படங்கள், போஸ்டர்கள், பேனர்கள், உடனடியாக அகற்றும் பணிகள் ஆரம்பமாகின.. அத்துடன் தலைவர்களின் உருவச்சிலைகளை துணிகளால் மறைக்கும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது.
போன் நம்பர்: தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் சொல்வதற்காகவே, பிரத்யேகமான போன் நம்பரை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.. இதுபோலவே, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ளது. தகவலை பகிர்ந்து கொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
1800 425 6669 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும், 94453 94453 என்ற வாட்ஸ்அப் நம்பரும் வெளியிடப்பட்டுள்ளது.
முறைகேடுகள்: இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனமும் அதிரடி உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.. மதுக்கடைகளிலும், மது விற்பனையிலும் முறைகேட்டை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிறுவனமும் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, மதுக்கடை ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள கடிதம் விபரம் இதுதான்:
"மதுக்கடைகளில் 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு இருக்கக் கூடாது. மதுக்கடையின் சராசரி விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 30 சதவீதத்திற்கு அதிகம் இருக்கக்கூடாது. மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது. தினமும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு ஆய்வு செய்யப்படும்.
மதுக்கடைகளில் உள்ள, 21 பதிவேடுகளும் தினசரி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இருப்பு பதிவேடு கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். மதுக்கடைகளும், அதில் உள்ள மதுக்கூடங்களும் அரசு அனுமதித்த நேரமான மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டும் இயங்க வேண்டும்.
மதுக்கூடங்கள்: மதுக்கூடங்களில் மதுபானம் இருப்பது கண்டறியப்பட்டால், மதுக்கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விற்கப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது தர வேண்டும். பிஓஎஸ் எனப்படும், விற்பனை முனைய கருவியில் விற்பதை அதிகப்படுத்த வேண்டும். மதுக்கடைகளில், டோக்கன் மற்றும், கூப்பன்களுக்கு கண்டிப்பாக விற்கக்கூடாது.
அனுமதியற்ற மதுக்கூடம் செயல்பட்டால், கடை மேற்பார்வையாளர் உடனே, மது விலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார், மாவட்ட மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும். கடை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும். காலாவதியான மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருத்தல் கூடாது" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications