சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு.. அபராதம் கட்டிட்டீங்களா? நோட்டீஸ் வந்துருக்கா? உடனே பாருங்க
சென்னை: சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக அறிவுரை ஒன்றையும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு தந்துள்ளனர்.
சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். இதற்காகவே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

அபராதம்: சமீபத்தில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை, கண்டுபிடித்து அபராதம் விதிக்க, சென்னையில் 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அமல்படுத்தியிருந்தனர்.
தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ட்ரிபில் ரைட், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை இந்த 360 டிகிரி கேமரா, அப்பட்டமாக படம்பிடித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவைத்துவிடுகிறது.. இந்த காட்சியை சரிபார்த்து, விதி மீறுபவருக்கு உடனடியாக அபராத ரசீது அனுப்பப்படுகிறது..
வாகனங்கள்: இதுபோன்ற வாகனங்கள் தென் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அந்தவகையில், விதிகளை மீறும் பலரும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இதைத்தவிர, சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் போலீசார் களப்பணியாற்றி வருகிறார்கள். 1500-ல் இருந்து 3 ஆயிரம் கேமராக்கள் வரையில் பொருத்தப்பட்டு அதன் மூலமும் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது..
எனினும், சில நேரங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் முறையாக வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் கிளம்பி உள்ளன.. அதாவது, தினமும் 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலையில், ஒருசிலர் மட்டும் தாங்கள் விதிமுறைகளில் ஈடுபடவில்லை, ஆனாலும், நோட்டீஸ் வந்துள்ளது என்கிறார்களாம்.
நிவாரணம்: ஒருவேளை, இதுபோன்று உண்மையிலேயே தவறு நடந்திருந்தால், பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 7 நாட்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன், இதற்காக போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை காட்டி, வாகன ஓட்டிகள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, விதிமீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்கு பிறகே அபராத ரசீது அனுப்பப்படுவதால், அதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் போக்குவரத்து காவல்துறையை அணுகி உரிய ஆதாரங்களை காட்டி அபராதம் கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்றும் போலீசார் தெரித்துள்ளனர்.
கும்பல்: இதற்கெல்லாம் காரணம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலுள்ள கன்ட்ரோல் ரூமில், தினமும் 3500 ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகிறதாம்.. எனினும், சென்னை மாநகர காவல்துறையை போன்ற போலியான முகவரிகளை உருவாக்கி, மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாம்.
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, இதுபோன்ற நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும், போலீசிலிருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேச மாட்டார்கள், பணம் பறிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் இப்படி பேச வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் இணையதள முகவரியிலேயே அபராதங்களை கட்டிக் கொள்ளலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications