வேலையை காட்டும் பாஜக.. ரஜினி கையில் அதிமுக?.. ஆளுநர் "இமேஜை" தூக்கி நிறுத்தியதன் மர்மம் என்ன?
ஆளுநர் ரவியை ரஜினிகாந்த் சந்தித்தது குறித்து காரணம் ஒன்று வட்டமடித்து வருகிறது
சென்னை: ரஜினிகாந்த், இன்று திடீரென ஆளுநர் ரவியை சந்தித்து பேசியுள்ளார்.. அரசியல் குறித்துதான் பேசினோம் என்றும் வெளிப்படையாகவே ரஜினி சொல்லி உள்ள நிலையில், அதுகுறித்து தகவல் ஒன்றும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அவருடைய அந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசியலையும் தாண்டி அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது.
Recommended Video
ரஜினி பேட்டியும் சரி, பேச்சும்சரி, பாஜகவின் பி டீம் என்றே விமர்சிக்கும் அளவுக்கு வலம் வந்தது. ஆனால், கொரோனா பரவல், உடல்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியை ரஜினி தொடங்கவில்லை... தேர்தலிலும் போட்டியிடவில்லை.. இதை மாறாக, ரஜினியே தன்னுடைய ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்களை அழைத்து அறிவித்தார்.
அதற்கு பிறகு, அரசியலிலிருந்து பின்வாங்கிய அவரது அறிவிப்பு, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது, மன உளைச்சலுக்கும் ஆளானார்கள்... எனினும், ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கியதுடன், மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தார்.. தொடர்ந்து படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில்தான், ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார்.. அரசியல் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கவில்லை என்கிறார் ரஜினி.

ஆளுநர் ரவி
அத்துடன், ஆளுநரை புகழ்ந்து பேசியுள்ளார்.. "மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. 30 நிமிடம் பேசினேன். அவர் காஷ்மீரில் பிறந்து, வடமாநிலங்களிலேயே இருந்தவர்.. ஆனால், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார்.. முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துவிட்டது.. இங்கே உள்ள ஆன்மீக உணர்வு அவர் மிகவும் நேசிக்கிறார்.. தமிழகத்தின் நல்லதுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சொல்லி உள்ளார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது" என்ற ரஜினிகாந்த், அரசியலுக்கு நான் மீண்டும் வரப்போவதில்லை என்றும் உறுதிப்படுத்தி உள்ளார்.

கருப்பு முருகானந்தம்
எனினும் விரைவில் எம்பி தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில், ஆளுநருடனான இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. சமீபத்தில் ஹைதராபாத் மாநாட்டில் அமித்ஷா பேசும்போது, "அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜக-வின் சகாப்தமாக இருக்கும்... தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய விரைவில் பாஜக ஆட்சியை அமைக்கும்" என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழக பாஜக விறுவிறு பணியில் இறங்கியது.. அந்த சமயத்தில்தான், தஞ்சாவூரில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்திடம் ஒரு அசைன்மெண்ட் தரப்பட்டிருந்தது.

அசைன்மென்ட்
அதன்படி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.. அதிலும் அண்ணாமலை முன்பு அனைவரும் பாஜகவில் இணைந்தனர்.. "ரஜினிகிட்ட என்ன எதிர்பார்த்தீங்களோ அந்த அரசியல் பாஜகவில் இருக்கும் என்றும் அண்ணாமலை, அந்த நிர்வாகிகளிடம் கூறியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. அந்த வகையில், தேர்தல் அரசியலை குறி வைத்து பாஜக நகர்ந்தாலும், பாஜகவுக்கும் - ரஜினிக்குமான உறவும் வலுவாக தொடர்ந்து கொண்டேதான் வருகிறது..

சான்ஸே இல்லை
இன்று ஆளுநரை சந்தித்து ரஜினி பேசியதற்கான காரணம் ஒன்று கசிந்து வருகிறது.. அதாவது, அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை அதிமுகவுக்குள் கொண்டு வந்து, அவரை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிடுகிறதாம்.. ஆளுநர் - ரஜினி சந்திப்பை வைத்து இந்த தகவல் அரசியல் களத்தில் கட்டமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.. அதிமுக விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாஜக தலையிடவில்லை. அவர்களை சமாதானப்படுத்தவும் இல்லை.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியின் விஸ்வரூப எழுச்சியையும் விரும்பாத பாஜக, நிச்சயம் அவருக்கு குடைச்சல் தரும் என்றே சலசலக்கப்பட்டு வந்தது.

தலைக்கு மேல் கத்தி
தலைக்குமேல் கொடநாடு விவகாரத்தில் கத்தியை தொங்கவிட்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி & டீம் என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், ஓபிஎஸ்ஸை பொறுத்தரை இரண்டாம் இடத்தில் இருந்தே பழக்கப்பட்டவர் என்பதாலும், பாஜக தலைமை என்ன சொன்னாலும் கட்டுப்படக்கூடிய அளவுக்கு விசுவாசம் நிறைந்தவர் என்பதாலும், அவருக்கான ஆதரவையும் பாஜக மறைமுகமாகவே தந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் ரஜினியை முன்னிறுத்துவதால், அதை ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே செய்யும்..

ஸ்திரத்தன்மை
பாஜகவின் முடிவுக்கு சசிகலாவும், தினகரனும் கட்டுப்படவும் வாய்ப்புள்ளது.. ஆனால் தொண்டர்கள்???? அதிமுகவின் வெற்றியை 50 வருடமாக தீர்மானித்து கொண்டிருப்பதும், கட்சியை இன்றுவரை ஸ்திரத்தன்மையுடன் அவைத்திருப்பதும் தொண்டர்கள் என்பதால், அடிப்படை உறுப்பினர்கூட இல்லாத ரஜினியை ரத்தத்தின் ரத்தங்கள் ஏற்பார்களா? பாஜகவின் சாயல் என்ற சலசலப்பு இதன்மூலம் உறுதியாகும் பட்சத்தில், அதை தமிழக மக்கள் ஏற்பார்களா? கூட்டணியில் உள்ளவர்கள் ஏற்பார்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, ரஜினியை வைத்து பாஜக போடும் இந்த கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா? என்றெல்லாம் தெரியவில்லை.

ரத்தத்தின் ரத்தங்கள்
ஆனால், திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், ஆளுநர் ரவி மீதான இமேஜை உயர்த்தி பேசியுள்ளார் ரஜினிகாந்த்.. அதுமட்டுமல்ல, "தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தின் நலனில் அக்கறை உடையவர்" என்றெல்லாம் சொல்லி, அவருக்கான நன்மதிப்பை தமிழகத்தில் பதிய முயற்சித்துள்ளார் ரஜினிகாந்த்.. ரஜினிகாந்த் இப்படி சொல்லி விட்டதாலேயே, ஆளுநரின் இமேஜ் தமிழகத்தில் திடீரென தூக்கி நிறுத்தப்பட்டுவிடுமா? அல்லது செல்வாக்கை இழந்துவரும் ரஜினியின் சூப்பர்ஸ்டார் இமேஜை, பாஜக இன்னும் சிதைத்துவிடுமா? தெரியவில்லை.. பார்ப்போம்.

ஆச்சரியம்
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டி உள்ளது.. ரஜினிகாந்த் அன்று அரசியலுக்கு வரப் போவதாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்டபோது, எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆரை வெகுவாகப் புகழ்ந்து பேசினார் ரஜினிகாந்த்.. அதை அதிமுகவினரே ஆச்சரியத்துடன் வரவேற்றனர்... அப்போதே ரஜினி அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் கூட பலரிடத்தில் எழுந்தது... ஆனால் அந்த பரபரப்புக்கு பிறகுதான் ரஜினி "திசை திருப்பப்பட்டார்" என்பார்கள்.. உண்மையிலேயே ரஜினி மனதிலும் அதிமுக பக்கம் போகலாமா என்ற ஆசை இருந்ததா என்பது தெரியவில்லை என்றாலும், அதிமுக மீது பற்று இருந்தது கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications