நீங்க பத்திரப்பதிவு பண்றீங்களா? சொத்து விற்பனை பத்திர பதிவில் புது மாற்றம்? விரைவில் அறிவிப்பு வருது
சென்னை: பத்திரப்பதிவு முறைகளில் பொதுமக்களின் வசதிக்காக, எத்தனையோ மாற்றங்களும், அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், இப்போதும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது... குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.
ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை என்றெல்லாம் அறிவிப்புகள் வெளியாகின.

எழுத்தர்கள்: அதேபோல, ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரணம், எல்லாமே இப்போது ஆன்லைன் பதிவு செய்யப்படுவதால், இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. மற்றொருபுறம், பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..
மோசடிகள்: ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசின் இந்த நடவடிக்கையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும், வலுத்துவருகின்றன.. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்கத்தின் சார்பில், அமைச்சர் மூர்த்தியிடம், பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் அரசு உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நேரடியாகவே வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஆவண எழுத்தர்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை, விரைவில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். அதாவது, சில இடங்களில் பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்யும்போது, 10 நிமிடம் மட்டும் எழுத்தர்களை அனுமதிக்க அதிகாரிகள் முன்வந்தார்களாம்..
மேலதிகாரிகள்: ஆனாலும், மேலதிகாரிகளின் ஒப்புதல் இல்லாததால், இதுவும் பாதிக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.. உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களுக்கு தடை விதித்த பதிவுத்துறை நிர்வாகம், வழக்கறிஞர்கள் வருகையை தடுக்க தயங்குவது ஏன் என்றும், அரசின் தடையால், பல இடங்களில் பத்திரத்தை தாக்கல் செய்யும்போது எழும் சந்தேகங்களை தீர்ப்பதில், பொது மக்கள் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பத்திரம், நகல் எழுதுவோர் சங்க பொதுச்செயலாளர் கண்ணன் சொல்லும்போது, ஒரு இடத்தில் பிரச்சனை என்பதற்காக, எல்லா ஆவண எழுத்தர்களுக்கும் தடை விதிப்பது சரி கிடையாது.. உரிய காரணங்களுடன், ஆவண எழுத்தர்கள் பத்திர தாக்கலின்போது உள்ளே வர அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.. விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் காத்திருக்கிறோம்" என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications