இனிமேல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் கிடைக்காதா? திடீர் தட்டுப்பாடு? காரணம் இதுவா? அரசு தந்த நம்பிக்கை
சென்னை: ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு எழாதவாறு, அனைத்து பொருட்களின் இருப்பையும் தயாராக வைத்திருக்கும்படி அரசு உத்தரவு பிறப்பித்திருப்பினும், துவரம் பருப்பு விநியோகத்தில் சிக்கல் வந்துவிடுமோ? என்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது. என்ன காரணம்?
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொதுவினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை என்று கடந்த ஜுன் மாதமே சில புகார்கள் வெடித்தன. துவரம் பருப்பு விலை ஒரு கிலோ 170 ரூபாய் ஆக விற்கப்பட்ட நிலையில், ரேஷன் கடைகளில் கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு விற்பனையானது.

3 மாதங்களாகவே ரேஷனில் துவரம்பருப்பு சரியாக விநியோகம் செய்யப்படவில்லை என்பதால், துவரம் பருப்பு வாங்க சென்றால், "போய் அடுத்த வாரம் வாருங்கள்" என்று கிராமப்புற ரேஷன் கடைகளில் சொல்லிவிடுகிறார்களாம்..
ரேஷன் கடைகள்: இதற்கு பிறகு கனடா மஞ்சள் பருப்பு வாங்கவும் தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் டெண்டர் கோரப்பட்டது. எனினும், கனடா பருப்பை அதிக விலைக்கு வாங்க அனுமதிக்ககூடாது என்றும் குரல்கள் வெடித்தன.
அதேசமயம், துவரம் பருப்பு வினியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 51,000 டன் துவரம் பருப்பு, 3 கட்டங்களாக கொள்முதல் செய்ய, தமிழக அரசு கடந்த மாதம் 16ம் தேதி ஆர்டர் தந்திருந்தது.. இதன் முதல்கட்டமாக வரும் 16ம் தேதிக்குள் 20,000 டன் துவரம் பருப்பை வழங்க வேண்டும்.
5 நிறுவனங்கள்: தமிழக அரசின் சிவில் சப்ளைஸ் நிறுவனத்துக்கு துவரம் பருப்பு சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை, விருதுநகரை சேர்ந்த சிபி ஃபுட்ஸ், வசுமதி டிரேடர்ஸ், மூர்த்தி டிரேடர்ஸ், சென்னை இன்டகரேட்டட் சர்வீஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடெட், மஹாராஷ்டிராவின் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய, 5 நிறுவனங்கள் எடுத்துள்ளன.இதன் முதல்கட்டமாக வரும் 16ம் தேதிக்குள் 20,000 டன் துவரம் பருப்பை வழங்க வேண்டும்.
ஆனால், கடந்த 10ம் தேதி வரை, வெறும் 3,473 மெட்ரிக் டன் மட்டுமே, மேற்கண்ட நிறுவனங்கள் சப்ளை செய்திருக்கிறதாம். 17 சதவீதம் மட்டுமே சப்ளை செய்துள்ளதால், இன்னும் 3 நாட்களில், 16,527 டன் சப்ளை முழுமையாக சப்ளை செய்யப்படவும் வாய்ப்பில்லை என்பதால், துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஏற்கனவே, துவரம் பருப்பு 2 மாதங்களுக்கு ஒருமுறை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் நிலையில், தீபாவளியும் நெருங்கிவிட்டதால், துவரம் பருப்பின் தேவை அதிகரித்துள்ளது...
நம்பிக்கை: எனினும் சம்பந்தப்பட்ட 5 நிறுவனங்களிடமும் பருப்பு சப்ளை செய்யும் பணியை விரைவுபடுத்தப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உணவு பொருள் வினியோக துறை வட்டாரங்கள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications