சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடி தூள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம அறிவிப்பு.. குஷியில் பெற்றோர்கள்.. இந்தியாவிலேயே முதல்முறை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் நலன் தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கியமான திட்டம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுக்க கொரோனாவிற்கு பின் பள்ளிகளை திறந்ததும், பள்ளிகளில் நிறைய கிரைம்கள் நடக்க தொடங்கி உள்ளன. மாணவ, மாணவியர் பலர் தற்கொலை செய்து கொள்வது, படிப்பை நிறுத்துவது, வெளியே ஓடி போவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

சில மாணவ, மாணவியர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டிலும் கூட இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொரோனாவிற்கு பின் பள்ளிகள் திறந்ததும் இது போன்ற கிரைம்கள் அதிகரித்துள்ளன.

 மதுரையை உலுக்கிய மாணவ, மாணவியர்கள்.. தொடர் போராட்டத்தால் பரபரப்பு! மதுரையை உலுக்கிய மாணவ, மாணவியர்கள்.. தொடர் போராட்டத்தால் பரபரப்பு!

 10 மாவட்டங்கள்

10 மாவட்டங்கள்

இந்த நிலையில்தான் தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் நலன் தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கியமான திட்டம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளில் குற்றச்செயல்கள், மாணவ, மாணவியர் தற்கொலையை தடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

பயிற்சிகள்

பயிற்சிகள்

அதன்படி மாணவ மாணவியர்கள் இதில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 10 மணி நேர பயிற்சி வருடம் முழுக்க பிரித்து அளிக்கப்படும். இந்த பயிற்சியில் மாணவர்கள் மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது, கோபம், ஏமாற்றத்தை எப்படி எதிர்கொள்வது, தற்கொலை எண்ணத்தை எப்படி கட்டுப்படுத்துவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். அதேபோல் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு, கலைகள் போன்ற மற்ற பயிற்சிகளை வழங்கி அவர்களை வேறு திசைக்கு கொண்டு சென்று, அவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது போன்ற பணிகளும் செய்து தரப்படும்.

நடத்தை பாதிப்பு

நடத்தை பாதிப்பு

நடத்தை பாதிப்பு கொண்ட பள்ளிகள், மாணவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். ஆசிரியர்களையே திட்டும் மாணவ, மாணவியர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும். அதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சியும் அளிக்கப்படும். நேரடியாக ஆசியர்கள் பேசி பயிற்சி வழங்குவது மட்டுமின்றி வல்லுனர்கள் பேசி இருக்கும் வீடியோக்கள் இவர்களுக்கு காண்பிக்கப்படும். அவர்களின் ரெக்கார்ட் வீடியோக்கள் இவர்களுக்கு போட்டுக்காட்டப்படும்.

25 பள்ளிகள்

25 பள்ளிகள்

தமிழ்நாடு முழுக்க 10 மாவட்டங்களில் 250 பள்ளிகள் முதல் கட்டமாக இதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சரியாக ஒரு வருடம் கழிந்த பின் தமிழ்நாடு முழுக்க அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் கொண்டு வரப்படும். அதேபோல் ஆசிரியர்களுக்கும் இதில் பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளுக்கு 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வகுப்புகளை எடுக்க பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் மனஅழுத்ததில் இருக்கும் ஆசிரியர்கள், வேலைகளை சரியாக செய்ய முடியாமல் கோபம் அடையும் ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இதில் தனியாக ஆலோசனைகள் வழங்கப்படும்.

 போன் மூலமும் ஆலோசனை

போன் மூலமும் ஆலோசனை

இதில் சில மாணவர்கள், ஆசிரியர்கள் மீது ஸ்பெஷல் கேர் எடுத்துக்கொள்ளப்படும். பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் ஸ்பெஷல் கேர் எடுத்து கவனிக்கப்படுவார்கள். அவர்களுக்கு போன் மூலமும் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்படும். இவர்களுக்கு என்று சிறப்பு உதவி எண்கள் வழங்கப்படும். இதன் மூலம் பள்ளிகளில் கொலைகள், தற்கொலைகள் போன்ற குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவோலேயே தமிழ்நாட்டில்தான் இந்த முறை அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BIG NEWS: Tamil Nadu Department of School Education to introduce mental health programmes for students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X