ஆஹா இது லிஸ்ட்லயே இல்லையே.. ஸ்டாலின் போட்ட மாஸ் உத்தரவு.. களமிறங்கிய சேகர் பாபு.. குஷியில் மக்கள்!
சென்னை: தமிழ்நாடு கோவில்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமைச்சர் சேகர் பாபுவின் முன்னெடுப்பின் மூலம் கோவில்களில் புதிய வசதி ஒன்று இன்றில் இருந்து அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் டாப் அமைச்சர்களில் ஒருவராக சேகர் பாபு பார்க்கப்படுகிறார். இந்த துறையில் இவரின் பணிகள் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முக்கியமாக கோவில்களை சீரமைத்தது, பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தது என்று இவரின் செயல்கள் பாராட்டப்பட்டன. இதன் காரணமாகவே இவருக்கு சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை வருடத்தில் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கோவில்கள்
தமிழ்நாட்டில் கோவில்களில் பக்தர்கள் எளிதாக வழிபாடு நடத்தவும், பணிகளை செய்துவிடும் வழி வகுக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. முக்கியமாக கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் முறை கைவிடப்படும். இந்த முறை படிப்படியாக குறைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சிறப்பு தரிசன கட்டணம் விலை குறைக்கப்படும். சமீபத்தில் தமிழ்நாடு கோவில்களில் சிறப்பு தரிசன முறை பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது சிறப்பு தரிசனம் பெயரில் கூடுதல் பணம் கொடுத்து வழிபாடு செய்யும் முறை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முறைகேடு
இந்த முறையை கைவிட வேண்டும். கோவில்களில் எல்லோரும் சமம் என்ற நிலை வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதோடு இந்த சிறப்பு தரிசன முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அந்த முறையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க போவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு அரசு முக்கியமான இரண்டு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

உத்தரவு
முதல் உத்தரவின்படி, கோயில் நிர்வாகங்களை ஆய்வு செய்ய பறக்கும் படை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் வடபழனி கோவிலில் தரிசன டிக்கெட் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. நீதிபதி என்று சொல்லாமல் இவர் சாதாரண தரிசன டிக்கெட்டை எடுத்துள்ளார். குடும்பத்துடன் சென்ற அவர் 3 டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார். ஒரு டிக்கெட் விலை 50 ரூபாய். எனவே இவருக்கு 3 டிக்கெட்டுகளை 150 ரூபாய் மதிப்பிற்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டுகளை கொடுத்துள்ளனர். கூடுதலாக 5 ரூபாய் டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளனர். இதன் மூலம் 45 ரூபாய் அரசு கணக்கில் செல்லாமல், ஊழியரின் பாக்கெட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சேகர்பாபு
இது போன்ற குற்றங்களை தடுப்பதற்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் கோவில்களில் திடீரென ரெய்டுகளை நடத்துவார்கள். கோவில் எப்படி இருக்கிறது, அடிப்படை வசதி உள்ளதா, கட்டண முறை முறையாக பின்பற்றப்படுகிறதா? வருகை பதிவேடு சரியாக உள்ளதா? நகைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? பிரசாதத்தில் முறைகேடு நடக்கிறதா? போன்ற விஷயங்களை ஆய்வு செய்வார்கள். மக்களோடு மக்களாக வழிபடுவது போல வந்து இவர்கள் கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிப்பார்கள்.

ஸ்டாலின் உத்தரவு
இரண்டாவதாக இன்னொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக மக்களே புகார் அளிக்க முடியும். கோயில் தொடர்பான ஆலோசனைகள், குறைகளை தெரிவிக்க இலவச கஸ்டமர் கேர் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1800 425 1757 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் பற்றி புகார்களை கொடுக்க முடியும். தமிழகத்தில் உள்ள 44 ஆயிரம் கோயில்களை கண்காணிக்கும் வகையில் 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை காரணமாக கோவில்களில் முறைகேடு நடப்பது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications