சூப்பர்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி "ஹைக்".. முதல்வரின் அறிவிப்பு ஏன் முக்கியம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு ஊழியர்களுக்கு 3% சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Recommended Video

    அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு... சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு

    முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    சென்னை, கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

     அகவிலைப்படி உயர்வு என்றால் என்ன?

    அகவிலைப்படி உயர்வு என்றால் என்ன?

    ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.

    எவ்வளவு உயரும்

    எவ்வளவு உயரும்

    இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும்., இந்த வருடம் ஜூன் மாதத்திற்கு பின் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். முக்கியமாக ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை மாநில அரசு ஊழியர்கள் வைத்து இருந்தனர். ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அகவிலைப்படி தங்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று அகவிலைப்படி உயர்வு செய்யப்படும் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    நிலுவைத்தொகை

    நிலுவைத்தொகை

    இதன் மூலம் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன. அதோடு அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் 1500 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரை சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது போக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை உள்ளது. இந்த நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய ஹைக்கோடு சேர்த்து நிலுவை அரியர் தொகையும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+