திமுக அமைச்சரால் பறிபோன மிகப்பெரிய வாய்ப்பு.. மீண்டும் சீண்டிய அண்ணாமலை!
சென்னை: திமுக அமைச்சராக இருந்த மதியழகனால் தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்க இருந்த அருமையான வாய்ப்பு பறிபோனது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடி குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முதல் ராக்கெட் தளத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்க வேண்டும். ஆனால் திமுக முன்னாள் அமைச்சர் மதியழகனின் தவறான அணுகுமுறையால் அந்த வாய்ப்பு தவறிவிட்டது" எனக் கூறியுள்ளார்.

மேலும், "குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் வெளிப்புறச் சுற்றளவு தற்போது அறிவிக்கப்பட்டு, அது நிறுவப்பட்டதும், தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் விண்வெளித் தொழில்களுக்கான மையமாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டில் நிறுவப்படுவதற்கு பிரதமரை பாராட்டியுள்ள அண்ணாமலை, அன்றைய திமுக அமைச்சர் மதியழகன் பற்றி விமர்சித்து திமுகவையும் சீண்டியுள்ளார்.
"1967 - 68 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய ராக்கெட் ஏவுதளம், தற்போது பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில் வரவிருக்கிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளம், தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி பெற, அன்றைய முதல்வர் அண்ணாதுரை, விஞ்ஞானி சதீஷ் தவானுடன் சந்தித்து பேச ஏற்பாடானது. ஆனால், முதல்வர் செல்லாமல் அன்றைய அமைச்சர் மதியழகனை அனுப்பினார்.
சதீஷ் தவான் பல மணி நேரம் காத்திருந்தார். மதியழகன் தள்ளாடிய நிலையில் வந்தார். சந்திப்புக்கு பின் வெளிய வந்த சதீஷ் தவான், இதற்கு மேல் தமிழ்நாடு வேண்டாம்; ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஏவுதளம் அமைப்போம் என்று அறிவித்தார். இது தான் திமுகவின் வரலாறு. இந்த சம்பவம் பற்றி, புகழ்பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணன், தன் சுயசரிதையான, 'ரெடி டு பையர்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

. அன்றிலிருந்து இன்று வரை, திமுகவின் ஊழலும், தேச விரோதப் போக்கும், மாறவே இல்லை. இப்போது 50 ஆண்டுகளுக்கு பின், இஸ்ரோ தமிழகம் நோக்கி வந்துள்ளது. புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கான நிலங்களை, குலசேகரப்பட்டினத்தில் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்போதும் திமுக ஆட்சி. இது, 1967 இல்லை என்பதை திமுக உணர்ந்து, இஸ்ரோவுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்" என ஏற்கனவே ஒருமுறை அண்ணாமலை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications