நினைத்ததை முடிக்கும் ஸ்டாலின்.. வொர்க் ஆகும் ‘மெகா’ பிளான்.. அவங்களும் வராங்களாமே.. ஆஹா.. கன்பார்மா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் முன்னெடுத்துள்ள தேசிய மாநாட்டில், காங்கிரஸுடன் மோதலைக் கடைபிடிக்கும் 3 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இது புதிய கூட்டணிக்கு விதை போடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ள நிலையில் பாஜகவை எப்படியும் வரும் வீழ்த்தியாக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் பிரமாண்ட கூட்டணியை கட்டமைக்க முயன்று வருகிறார். இந்நிலையில், நாளை நடைபெறும் தேசிய மாநாடு அரசியல் நோக்கர்களால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் கொதிப்பு

எதிர்க்கட்சிகள் கொதிப்பு

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாகவே சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் பாஜகவுக்கு எதிராக யாரெல்லாம் குரல் எழுப்புகிறார்களோ அவர்கள் குரல்வளை நசுக்கப்படுவதாகவும், அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவது பாஜக அரசின் வாடிக்கையாக உள்ளது எனவும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது., இதனை தொடர்ந்து அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் பழிவாங்கல்

அரசியல் பழிவாங்கல்

அதற்கு முன்னதாக, டெல்லி துணை முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் மனீஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அதேபோல, பி.ஆர்.எஸ் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் மகளும் குறிவைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகன் ஊழல் வழக்கில் சிக்கினார். மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தேசிய அரசியல்

தேசிய அரசியல்

இதன் ஒரு பகுதியாக சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு, டெல்லியில் நாளை மாலை நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய அரசியல் தலைவர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்தி பாஜகவுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் தற்போது நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் தேசிய மாநாட்டை முன்னெடுத்துள்ளார். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் காணொளிக் காட்சி மூலமாக கலந்து கொள்ள உள்ளனர்.

முதலமைச்சர்கள்

முதலமைச்சர்கள்

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி மனோஜ் குமார் ஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முகமது பஷீர், தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதல்வருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

 நினைத்ததை ஈடேற்றும் ஸ்டாலின்

நினைத்ததை ஈடேற்றும் ஸ்டாலின்

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே மு.க.ஸ்டாலினின் எண்ணமாக இருக்கிறது. காங்கிரஸ் அல்லாத கூட்டனி கரைசேராது என்று அண்மையில் கூட ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் தான், காங்கிரஸ் மற்றும் நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களை வைத்து சமூக நீதி மாநாட்டை டெல்லியில் நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். இதில் கவனிக்கப்படும் விஷயம், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. கே.கேசவ ராவ், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்பதுதான்.

அந்த 3 கட்சிகளும்

அந்த 3 கட்சிகளும்

பாஜகவுக்கு எதிராகப் பேசி வரும் கட்சிகளாக இருந்தாலும், பி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சி உடனும் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக அரசியல் செய்து வருவதால், அக்கட்சி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றே கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்தக் கட்சிகளும், நாளை நடைபெறும் மாநாட்டிற்கு தங்கள் பிரதிநிதிகளை பேச அனுப்புகின்றன.

 மெகா கூட்டணி

மெகா கூட்டணி

காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் மேடையில் இந்தக் கட்சிகளை இணைத்ததே பெரிய வெற்றிதான், இந்த மாநாடே பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை திட்டமிடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தேசிய மாநாட்டில் ஆம் ஆத்மி, பி.ஆர்.எஸ், திரிணாமுல், ஆகிய கட்சிகளும் பங்கேற்பது அரசியல் நோக்கர்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+