பெண்களுக்கு சூப்பர் அப்டேட்..! ஆதரவற்ற விதவை வருமான உச்சவரம்பை ‘டபுள்’ மடங்காக உயர்த்திய ஸ்டாலின்!
சென்னை: தமிழகத்தில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பை ரூ.4,000-லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாக இனி பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு சலுகையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆதரவற்ற விதவைகள் பயன்பெறும் வகையில் புதிய அரசாணை வெளீயிடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசாணை
தமிழக அரசுப் பணியாளர் சட்டம் 2016-ன் படி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கென 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்சவரம்பு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமய மூர்த்தி பிறப்பித்துள்ள அரசாணையில், "தமிழகத்தில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பு கடந்த 1993 ஆம் ஆண்டு ரூ.1,000 ஆக இருந்தது. பின்னர், 2006 ஆம் ஆண்டில் இது ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டது.
உச்சவரம்பு உயர்வு - இட ஒதுக்கீடு
தற்போது நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உச்சவரம்பை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குடும்ப ஓய்வூதியம், தனிப்பட்ட தொழில் வருமானம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களில் இருந்தும் வரும் மாத வருமானம் ரூ.8,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள் மட்டுமே இதில் அடங்குவர்.
விவாகரத்து பெற்றவர்கள் ஆதரவற்ற விதவை பிரிவின் கீழ் வரமாட்டார்கள். அரசுப் பணிகளில் (Pay level 10 வரை) பெண்களுக்கு ஒதுக்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டில், 10 சதவீத இடங்கள் ஆதாவற்ற விதவைகளுக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்படும்." எனத் தெரிவிக்கப்படுள்ளது.
ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற
அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு, கணவரின் இறப்புச் சான்றிதழ்,
வயதுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மேலும், வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். அதனுடன், விண்ணப்பதாரரின் புகைப்படம் கொடுக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சரிபார்த்து, அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வார்கள். அதிகாரிகள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் (RDO) அல்லது துணை ஆட்சியர் மூலம் டிஜிட்டல் கையொப்பமிட்ட சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம், போட்டித் தேர்வுகளிலும், அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு பெறமுடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications