சம்பளதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்! மே 1 முதல் சத்தமில்லாமல் "உயரும் ஊதியம்!" கோடிக்கணக்கானோர் ஹேப்பி!
சென்னை: மாதத்தின் 1ம் தேதி என்றாலே எல்லோருக்கும் சம்பள நாள் நினைவுக்கு வரும். இந்த மே 1 இன்னும் ஸ்பெஷல்! உங்களைப் போன்ற கோடிக்கணக்கான சம்பளதாரர்களுக்கு இன்கிரிமென்ட் இல்லாமலேயே சம்பளம் உயரப்போகுது! என்ன காரணம்? மத்திய அரசின் ஒரு அதிரடி முடிவுதான்!
ஆம், மத்திய அரசு 2025-26 நிதியாண்டிற்கான புதிய வருமான வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு வரை புதிய வரி விதிப்பில் ₹7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின்படி, இப்போது ₹12 லட்சம் வருமானம் வரை வரியே இல்லை! இந்த மாற்றம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளதால், மே 1 அன்று வரும் ஏப்ரல் மாத சம்பளத்தில் அதன் பலன் உடனடியாகத் தெரியும்!

உங்களுக்கு எவ்வளவு லாபம்?
மாதம் ₹1 லட்சம் சம்பளம் வாங்கும் நம்ம ஏரியா ரவியையே இதற்கு உதாரணமாக எடுப்போம். அவருக்கு இது எப்படி லாபம் என்பதைப் பார்ப்போம். ரவியின் ஆண்டு வருமானம் ₹12 லட்சம். கடந்த ஆண்டு புதிய வரி விதிப்பில் இருந்தபோது, ரவி ஆண்டுக்கு சுமார் ₹71,500 வருமான வரி கட்டி வந்தார். அதாவது மாதம் சுமார் ₹5958. இந்த வரித்தொகை ரவியின் மார்ச் 2025 மாத சம்பளம் வரை பிடித்தம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு முதல் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது! ₹12 லட்சம் வருமானத்திற்கு புதிய வரி விதிப்பின்படி வரி ₹52,500 என்றாலும், பிரிவு 87A கீழ் கிடைக்கும் அதிகபட்ச வரித் தள்ளுபடி ₹60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், ₹12 லட்சம் வருமானம் வரை வரி பூஜ்ஜியம்!
ஆகவே, ரவி இதுவரை கட்டி வந்த மாத வரியான ₹5958 இனி மிச்சமாகும்! இது, ₹5958 ரவியின் மே 1 ஆம் தேதி சம்பளத்தில் கூடுதலாகக் கிடைக்கும்! இது இன்கிரிமென்ட் இல்லாமல் கிடைக்கும் போனஸ் போல இல்லையா?
ரூ.12.75 லட்சம் வரை வரி இல்லை!
இதுமட்டுமல்ல, புதிய வரி விதிப்பை தேர்வு செய்த சம்பளதாரர்களுக்கு ₹75,000 நிலையான கழிவும் (Standard Deduction) உண்டு. ஆக, சம்பளம் மூலம் ஆண்டுக்கு ₹12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் கூட இனி வருமான வரி கட்டத் தேவையில்லை! முன்பு ₹7.75 லட்சத்திற்கு மேல் சம்பாதித்தவர்கள் புதிய வரி விதிப்பிலும் வரி கட்ட வேண்டிய நிலை இருந்தது. இப்போது அந்த கவலை முற்றிலும் இல்லை! நடுத்தர வர்க்கத்தினருக்கு இது மிகப்பெரிய நிம்மதி!
பெரும்பாலானோருக்கு புதிய வரி விதிப்பே லாபம்!
ஏப்ரல் 1, 2025 முதல் புதிய வரி விதிப்புதான் தானாகவே தேர்வு செய்யப்படும் (Default option). பழைய வரி விதிப்பு உள்ளது என்றாலும், வீடு வாடகை படி (HRA), வீட்டுக் கடன் வட்டி, ஆயுள் காப்பீடு, சேமிப்பு திட்டங்கள், மருத்துவக் காப்பீடு போன்ற பிரிவு 6-A கீழ் பெரிய அளவிலான கழிவுகளை கோருவோருக்கு மட்டுமே இனி அது லாபகரமாக இருக்கும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தரவுகளின்படி, கடந்த ஆண்டே 75% பேர் புதிய வரி முறைக்கு மாறிவிட்டனர். இப்போது ₹12 லட்சம் வரை வரி இல்லை என்பதால், 90% முதல் 97% வரி செலுத்துவோர் புதிய முறைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கோடி பேர் இனி வரி கட்ட மாட்டார்கள்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, இந்த மாற்றத்தால் சுமார் ஒரு கோடி வரி செலுத்துவோருக்கு இனி வரியே கிடையாது! இதன் எளிமையான பொருள் என்னவென்றால், சம்பளம் வாங்கும் 10 பேரில் 9 பேர் இனி வருமான வரி பற்றி கவலைப்படத் தேவையில்லை!
ஆக மொத்தம், சம்பளதாரர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு பொன்னான செய்தி! உங்கள் கையில் இனி கூடுதல் பணம்! மே 1 உங்களுக்கு டபுள் கொண்டாட்டம்!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications