எடப்பாடி வலதுகரம் சேலம் இளங்கோவன்...சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல் - ஹைகோர்ட்டில் மனு டிஸ்மிஸ்!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் ஆர். இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளையின் கல்வி நிறுவன கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்த இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முசிறி அறக்கட்டளை
இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக இருக்கும் முசிறியில் உள்ள சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை குறித்த விவரங்களை வழங்கக் கோரியும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அறக்கட்டளைக்கும், நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் இளங்கோவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

ஹைகோர்ட்டில் வழக்கு
இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் அறங்காவலர் என்.அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறக்கட்டளை தரப்பில் 2006ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஒரு பொது அறக்கட்டளையில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், அறக்கட்டளையின் ஆவணங்களை கோருவதும், மதிப்பீடு செய்வதும் சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கம்
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், அறக்கட்டளை நிர்வாகியாக இளங்கோவன் பொறுப்பேற்றபோது 17 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்த நிலையில், 2017 முதல் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 234 ஏக்கர் நிலம் அறக்கட்டளை பெயரில் உள்ளதாகவும், அறக்கட்டளை நடத்தும் கல்வி நிலையங்களில் 14 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பிற்கு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, அவற்றை ஆய்வு செய்யவே சம்மன் அனுப்பப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இளங்கோவன் தரப்பு மனு டிஸ்மிஸ்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்படவராக சேர்க்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் அறக்கட்டளை கட்டடங்களை மதிப்பீடு செய்வதையும், ஆவணங்களை கோருவதையும் ஆட்சேபிக்க முடியாது என்றும், புலன் விசாரணையின்போது ஆதாரங்களை சேகரிக்கும் விசயத்தில் தலையிட முடியாது என்றும் கூறி, அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஓவர் எதிர்பார்ப்பு
தற்போது அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டியில் எடப்பாடியின் வலதுகரமாக இருப்பவர் சேலம் இளங்கோவன். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமக்கு எப்படியும் ஒரு சீட் வாங்கி விடுவது என கனவில் இருக்கிறார். எடப்பாடியின் தயவில் லோக்சபா எம்.பி.யாவதில் தீவிரம் காட்டி வருகிறா இளங்கோவன். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சேலம் இளங்கோவன் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications