கோயில் இடத்தில் குடியிருக்கீங்களா.. இவர்களுக்கு எல்லாம் பெரும் சிக்கல்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்ளை சட்டவிரோதமாக வாங்கியவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த சொத்துக்கள் அனைத்தும் பறிபோகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோவில் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, அச்சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் போது, குறிப்பிட்ட அந்த நிலம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் எனவும், அதனால் அதற்கு பட்டா வழங்க ஆட்சேபம் தெரிவித்ததாகவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அறநிலையத் துறை தரப்பில், கோவில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோவில் நிலங்கள், அறநிலையத் துறைக்கு தெரியாமல், அறங்காவலர்களால் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அறநிலையத் துறை விசாரணை நடத்தி, ஆவணங்களை சேகரித்து, நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பேராசை பிடித்த சிலரின் இந்த மோசடியில் நிலங்களை வாங்கியவர்களும் பாதிக்கப்படுகின்றனர்... இருப்பினும் அவர்களுக்கு கருணை காட்ட முடியாது எனக் கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications