Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் திருமண நாளில் விஜயகாந்த் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை! அண்ணன் மாதிரி.. உருகிய ஏஆர் முருகதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனை என் திருமண நாளில் நடந்தது என்று இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியுள்ளார். மேலும் விஜயகாந்த் மறைவு ஒரு வதந்தியாக இருக்க கூடாதா? என்று நினைக்க தோன்றுவதாக அவர் கூறியுள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.15 மணிக்கு காலமானார். விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு தொண்டர்களும், ரசிகர்களும் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நிறைய அவரைப் பற்றிய வதந்திகள் வந்தது. அப்படி இதுவும் ஒரு வதந்தியாக இருக்கக் கூடாதா என்று தான் நினைக்க தோன்றுகிறது என இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறினார்.

Big turning point in happened in Vijayakanths life on my wedding day says AR Murugadoss

இது தொட்பாக ஏஆர் முருகதாஸ் கூறியதாவது:- நிறைய அவரைப் பற்றிய வதந்திகள் வந்தது. அப்படி இதுவும் ஒரு வதந்தியாக இருக்கக் கூடாதா என்று தான் நினைக்க தோன்றுகிறது என் மனது. இருந்தாலும் தொடர்ந்து வந்த செய்திகள் என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது கேப்டன் விஜயகாந்த் உடன் கருப்பு நிலா படத்துடன் பணியாற்றி இருக்கிறேன். தொடர்ந்து ரமணா படத்தை விஜயகாந்த்தை வைத்து இயக்கினேன்.

ஒரு அண்ணன் போல தான் பழகுவார். ரமணா படத்துக்கு பின்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் விஜயகாந்த்தை சந்தித்தேன். அவர் சொன்னார் ஏன் இன்னும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறாய் என்று. அப்போது நான் கூறினேன், நீங்க என் கல்யாணத்துக்கு வருவதாக இருந்தால் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். நீ பொண்ணு பாரு நான் வார்ரேன் அப்படின்னு சொன்னாரு. அவர் சொன்னது போலையே என் திருமணத்தை விஜயகாந்த் நடத்தி கொடுத்தார்.

இதனை நினைக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவரோட படப்பிடிப்பில எல்லாருக்கும் சமமான உணவு.. செட்டுக்குள்ள வந்ததும் எல்லாரையும் சாப்பிட்டீங்களா.. சாப்பிட்டீங்களா.. என்று தான் கேட்பார்.. எல்லாருக்கும் எல்லாம் சமமா கிடைக்கணும்னு நினைப்பார்.. அதனை கடைப்பிடிக்கவும் செய்வார்.. சண்டைக் காட்சியில் எல்லா பைட்டரோட பெயர் தெரிஞ்சி வச்சிருப்பார். அவங்க குடும்பத்துல உள்ளவங்க பேரையும் கூட தெரிஞ்சு வச்சிருப்பார்..

அவர்களிடம் உறவினர் மாதிரி பழகுவார். ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.. இது இதை என்னால ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் மக்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.. திருமணத்துக்கு வரும்போது ரொம்ப தாமதம் ஆகிவிட்டது. ஏனென்றால் உளுந்தூர்பேட்டைக்கு ஒரு 50 கிலோமீட்டர் முன்பாகவே அவரது ரசிகர்கள் மறித்துவிட்டார்கள்.. இதனால் சிரமப்பட்டு தான் என் திருமணத்திற்கு வந்தார்.

திருமணத்தை நடத்தி கொடுத்துவிட்டு உடனே ஒரு கூட்டத்திற்கு சென்றார். அந்தக் கூட்டத்தில் தான் முதல் முதலில் விஜயகாந்த் அரசியல் கலந்த சொற்பொழிவு ஆற்றினார். அதுதான் அவரது அரசியலுக்கு வருவதற்கான ஒரு இதாக இருந்தது. அதுதான் அவர் கட்சி ஆரம்பிக்க ஒரு துரும்பாக இருந்தது. என் திருமண நாளில் தான் இந்த கூட்டம் நடந்தது. இதை நினைக்கும் போதும் ஒரு ஆச்சரியமாக இருக்கிறது.

திருமணத்தில் எனக்கு ஒரு மோதிரமும் என் மனைவிக்கு ஒரு மோதிரமும் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். இதேபோல் ரமணா படம் ரிலீஸ் ஆன பிறகு என்னை வீட்டுக்கு அழைத்து டிரஸ் எடுத்துக் கொடுத்தார்.. இப்படி ஒரு நல்ல மனிதர்.. இப்படி ஒரு மனிதரை தமிழகம் இழந்து இருப்பதை தாங்க முடியவில்லை. என்னாலும் இதை நம்ப முடியவில்லை..இவ்வாறு ஏ. ஆர் முருகதாஸ் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+