மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலரே வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒரு பெண்ணின் தனிமையை பயன்படுத்தி அத்துமீற முயன்ற சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறையையும் உலுக்கியெடுத்துள்ளது... உதவி செய்ய வந்ததாக சொல்லி, அந்த பெண்ணின் படுக்கையறை வரை சென்ற அந்த நபர், இறுதியில் அதே பெண்ணால் அறையில் வைத்துப் பூட்டப்பட்டு கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதான ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணமானவர்.. ஆனால், தனது கணவரை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

இவர் மீது ஏற்கனவே கள்ளச்சந்தையில் மது மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தொடர்ந்து ரகசியமாக தொழில் செய்யவும் ஐஸ்அவுஸ் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த சில காவலர்களுக்கு அவர் "மாமூல்" கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது..
மண்டைக்கேறிய மதுபோதை
இந்த தொடர்பின் மூலமாகவே ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வந்த சூர்யா என்ற போலீஸ்காரருடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 4-ம் தேதி இரவு, ரம்யாவின் வீட்டிற்கு சென்ற சூர்யா, அங்கு மது விற்பனை நடைபெறுகிறதா என சோதனை செய்வது போல நடித்துள்ளார்... அப்போது ரம்யா, தன் மீதுள்ள பழைய 3 வழக்குகளையும் எப்படியாவது ரத்து செய்து தருமாறு சூர்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு சூர்யாவும் உதவுவதாக பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இந்த வாக்குறுதியைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்த நினைத்த சூர்யா, நேற்று முன்தினம் இரவு மது போதையில் ரம்யாவின் வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார். பழைய வழக்குகள் குறித்து பேச வேண்டும் என்று கூறி உள்ளே நுழைந்தவர், மெல்ல மெல்லத் தனது சுயரூபத்தைக் காட்ட தொடங்கியுள்ளார்.
ஆடைகளை களைந்து ஆபாச பேச்சு
திடீரென ரம்யாவைத் தனி ரூமுக்கு அழைத்துச் சென்ற சூர்யா, ஆபாசமாக பேசியதுடன் அவரது ஆடைகளை கழற்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத ரம்யா அதிர்ச்சியடைந்தார்..
எனினும் பதற்றமடையாமல் "உங்களுக்குத் தாகமாக இருக்கும், நான் தண்ணீர் எடுத்து வருகிறேன்" என்று கூறி சூர்யாவை நைசாக பேசி அந்த ரூமிலேயே உட்கார வைத்தார். பிறகு வெளியே வந்தவர் மின்னல் வேகத்தில் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மது போதையில் அறையினுள் சிக்கிக்கொண்ட சக காவலர் சூர்யாவை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
கமிஷனர் அருண் - அதிரடி சஸ்பெண்டு
இதனிடையே, ரம்யா தனது அக்கம் பக்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினரின் உதவியோடு, சூர்யா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராட்டத்தில் குதித்தார். இந்த விவகாரம் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களின் கவனத்திற்கும் சென்றது.
ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது மற்றும் ஒழுங்கீனமாகச் செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காகக் காவலர் சூர்யாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து ஆணையர் உத்தரவிட்டார். 2017-ல் பணியில் சேர்ந்த ஒரு காவலர், வழக்குகளை முடித்து வைப்பதாகக் கூறி பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!
உனக்கும் கணவன் இல்லை
சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.. 28 வயதாகிறது.. இவருக்கும் திருமணமாகிவிட்டது.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார்.
"சம்பந்தப்பட்ட பெண் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இது தொடர்பான சோதனைக்காகவே அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றேன். வேறு எந்த நோக்கத்துடனும் அங்கு செல்லவில்லை" என சூர்யா போலீஸாரிடம் விளக்கம் தந்திருக்கிறார்..
ஆனால் உண்மை அதுவல்ல.. அவர் அந்த பெண்ணிடம் "நீ கணவரை பிரிந்தும், நான் மனைவியைப் பிரிந்தும் வாழ்கிறோம். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்" என்று சொல்லியே பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றாராம்.. இதனாலேயே அவர் மீது காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...!!












Click it and Unblock the Notifications