கரும்புத் தோகைக்குள் உயிர் காதலி.. கறிக்கடை கத்தியுடன் வந்த காதலன்.. திடீர்னு நடந்த பெரிய ட்விஸ்ட்
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நகினா காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த மிகக் கொடூரமான கொலை சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது.. காதல் என்ற பெயரில் அரங்கேறிய இந்த வன்முறை, ஒரு குடும்பத்தின் கனவையே சிதைத்துவிட்டுள்ளது.. இதுதொடர்பான விசாரணையை போலீஸார் நடத்தி வந்தாலும், அந்த அதிர்ச்சி இன்னமும் அக்கிராமத்தை விட்டு நீங்கவில்லை.. என்ன நடந்தது?
பிஜ்னோரின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சுஜாதா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்ற இளைஞருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது..

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக நேசித்து வந்த நிலையில், அடிக்கடி ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்..
காதலி சுஜாதா
இந்நிலையில், குமார் தனது காதலி சுஜாதாவிடம் தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து கடும் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்..
ஆனால், சுஜாதா தனது குடும்பத்தின் ஏழ்மை நிலை மற்றும் தனது உடன்பிறந்தவர்களின் எதிர்காலம் போன்ற சில முக்கியக் காரணங்களைக் கூறி திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்துள்ளார்.. "இன்னும் சில காலம் பொறுத்திருங்கள், வீட்டில் பேசி சம்மதிக்க வைக்கிறேன், நிச்சயம் நாம் திருமணம் செய்துகொள்வோம்" என்று அந்தப் பெண் உறுதியளித்துள்ளார்..
கரும்பு தோட்டத்தில் கள்ளக்காதலி
ஆனாலும் குமாரின் மனதில் சந்தேகம் குடிகொள்ளத் தொடங்கியது.. ஒருவேளை தன்னுடைய காதலி தன்னை ஏமாற்றுகிறாரோ அல்லது திருமணத்தைத் தட்டிக்கழிக்கிறாரோ என்ற தேவையற்ற எண்ணம் அவரை ஆத்திரத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்றது.. இப்படித் தினம் தினம் சாக்குச் சொல்லித் தட்டிக்கழிக்கும் காதலி சுஜாதாவை ஒரேயடியாகத் தீர்த்துக்கட்டிவிடலாம் என்ற கொடூரமான முடிவுக்கு வந்தார் குமார்..
சம்பவம் நடந்த அன்று சாயங்காலம், குமார் தனது காதலி சுஜாதாவைத் தனியாகச் சந்தித்துப் பேச விரும்புவதாகச் சொல்லி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு கரும்புத் தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார்.. காதலனின் அழைப்பை ஏற்று சுஜாதாவும் அங்கு சென்றுள்ளார்..
அப்போது இருவருக்கும் இடையே மறுபடியும் கல்யாண பேச்சு எழுந்துள்ளது.. மறுபடியும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. சுஜாதா தன் நிலைப்பாட்டைப் பொறுமையாக விளக்கியபோதும்கூட, அவரது காரணத்தைக் குமார் ஏற்கத் தயாராக இல்லை..
அரிவாளை எடுத்த குமார்
மீண்டும் திருமணத்தைத் தட்டிக்கழிக்கும் சுஜாதா மீது கடும் ஆத்திரம் கொண்டார் குமார்.. கையோடு மறைத்துக்கொண்டு வந்திருந்த ஆயுதத்தை எடுத்து, சுஜாதாவின் கழுத்தை அறுத்தார்.. வலியால் சுஜாதா துடித்தபோதும் ஈவு இரக்கமில்லாமல் உயிர் போகும்வரை கழுத்தை அறுத்தார் குமார்.. இறுதியில், சுஜாதாவின் சடலத்தின் மீது கரும்புத் தோகைகளைத் தூவி மறைத்துவிட்டு அங்கிருந்து எகிறி தப்பியோடிவிட்டார்..
இதனிடையே, சுஜாதா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினருடன் தேடினார்கள்.. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீஸில் புகார் அளித்தனர்..
மறுநாள் காலையில் கரும்புத் தோட்டத்திற்குச் சென்ற விவசாயிகள், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.. கூடுதல் போலீஸ் சூப்பர்வைசர் சஞ்சீவ் பாஜ்பாய் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.
வாக்குமூலம்
இதுகுறித்த விசாரணையையும் தொடங்கினர்.. உடனடியாக சுஜாதாவின் செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது.. அப்போதுதான், குமார் சிக்கினார்.
முதல்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், காதலி திருமணத்தைத் தள்ளிப்போட்டதால் ஆத்திரமடைந்து இந்தக் கொலையை செய்ததைக் குமார் ஒப்புக்கொண்டார்.. காதலித்த பெண்ணையே கரும்புத் தோட்டத்தில் வைத்துத் தீர்த்துக்கட்டிய இந்த சம்பவம் பிஜ்னோர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்..!!












Click it and Unblock the Notifications