முதலிரவில் மணப்பெண் பேச பேச அப்படியே ஆடிப்போன மணமகன்.. எழுந்து ஒரே ஓட்டம்
சென்னை: திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையுடன் முதலிரவுக்காக ஆசையாகக் காத்திருக்கும் மணமகன்களுக்கு, சில எதிர்பாராத சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரிதாபகரமான நிலைமையையும் ஏற்படுத்திவிடுகின்றன.. கனவுகளோடு தொடங்கும் அவர்களின் இல்லற வாழ்க்கை, ஒரு சில மணிநேரங்களிலேயே கசப்பான அனுபவமாக மாறி சோகத்தில் முடிகிறது.. இந்த சம்பவத்தை பாருங்கள்
கிழக்கு கோதாவரி மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. மண்டபேட்டா மண்டலத்துக்குட்பட்ட வேமுலபள்ளி கிராமத்தை சேர்ந்த 41 வயதான சூர்யபிரகாஷ், ராயவரத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றும் சந்தியா (40) என்பவரை காதலித்து, கடந்த வியாழக்கிழமை அன்னவரம் கோயில்லில் திருமணம் செய்துகொண்டார்..

காதல் திருமணம்
இந்த திருமணத்திற்கு சந்தியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமண புகைப்படத்தை பார்த்து கோபமடைந்த அவரது அண்ணன்கள், திருமணமான 2 நாளிலேயே துவாரபூடி கிராமத்தில் சூர்யபிரகாஷ் வீட்டிற்கு சென்றபோது அவரை கற்களால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் சந்தேகித்தனர்..
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. தொடர்ந்து நடந்த விசாரணையில், சந்தியாவின் சகோதரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை கைது செய்த போலீசார், இது கௌரவக் கொலை எனும் கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் சமூகத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலிரவு மணமகன்
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது..
அங்குள்ள ஒரு இளம் பெண்ணுக்கும், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த திங்கட்கிழமை இரவு மிக விமரிசையாகத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.. திருமணச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, மணப்பெண் தனது கணவரின் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்..
திருமணமான அன்றைய முதலிரவில், மணமகன் தனது புது மனைவியுடன் அறைக்குச் சென்றபோது, அந்தப் பெண் திடீரென்று தன்னுடைய காதல் கதைகளை சொல்ல ஆரம்பித்தார்..
மாப்பிள்ளை தலையில் கல்
நான் ஏற்கனவே வேறு ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறேன்.. அவரைத்தான் கல்யாணம் செய்ய விரும்பினேன்.. இந்தத் திருமணத்தில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை, குடும்பத்தாரின் கட்டாயத்திற்காகவே இதற்குச் சம்மதித்தேன், காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.. விருப்பமில்லாமல் இந்தத் திருமண வாழ்க்கையை என்னால் தொடர முடியாது, என்னை எப்படியாவது அவருடன் ஒன்று சேர்த்துவிடுங்கள்" என்று உறுதியாக சொன்னார்..
இதைக் கேட்டதும் மாப்பிள்ளைக்கு தலையே சுத்தியது.. மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார்.. எனினும், ஒளிவுமறைவு இல்லாமல் அனைத்தையும் துணிச்சலாக சொன்னதால், இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கொண்டு சென்றார்..
முதல் இரவு அதிர்ச்சி
திருமணம் நடந்த சில மணி நேரங்களிலேயே நடந்த இந்தத் திடீர் திருப்பத்தால் இரு குடும்பத்தினரும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.. இது குறித்து மணமகனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.. மணப்பெண் தனது காதலனுடன் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. முதலிரவில் மணமகனுக்கு மணப்பெண் தந்த இந்த அதிர்ச்சி சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது-.
இருந்தாலும் இவ்வளவு துணிச்சலும், தீர்க்கமான முடிவிலும் இருந்த பெண், திருமணத்துக்கு முன்பே இந்த விஷயத்தை சொல்லி இருக்கலாம்...!!












Click it and Unblock the Notifications