Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருக்கமாய் வந்துவிட்டது.. தலைவர்கள் பிரச்சாரத்துக்கும் ரெடியாகிவிட்டார்கள்.. இருந்தாலும், அதிமுகவில் வெளியிட்ட வாக்காளர் லிஸ்ட்டின் அதிர்ச்சி இன்னும் பலரிடமிருந்து நீங்கவில்லை.. அதிலும் கோவையில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பலவிதமான சந்தேகங்களையும், பலவிதமான யூகங்களையும் இணையத்தில் கிளப்பி விட்டுள்ளது.

கடந்த முறை அதிமுக கூட்டணியில், கோவை தெற்கு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது.. அதனால் இந்த முறை எப்படியாவது கூடுதலாக ஒரு தொகுதி பெற்றுவிட வேண்டும், அதில், அண்ணாமலையை களம் இறக்க வேண்டும் என உள்ளூர் பாஜவினர் தீவிரமாக இருந்தனர். ஆனால் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள கோவை மாவட்டத்தில் வெறும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...

Big Twist Unexpected in Coimbatore Annamalai faces pressure from both sides as Kovai Turns Political hotspot

அண்ணாமலை - கோவை தொகுதி

அதேபோல கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்பட்டது. இதற்கேற்ப கட்சி சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் என அண்ணாமலையும் சொல்லி வந்தார். அத்துடன் மேலுள்ள 2 தொகுதிகளிலும் தொடர்ந்து தலைகாட்டி வந்தார்.

ஆனால் தொகுதி பங்கீட்டில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதால், வானதி சீனிவாசன் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஒரே ஒரு தொகுதி

இந்நிலையில் அண்ணாமலைக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் கசிந்தபடி உள்ளன.. அதாவது பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது தனி ஆவர்த்தனம் செய்து வந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களாகவே பாஜகவால் ஓரங்கட்டப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

மேலும் சொத்து குவிப்பு, ரியல் எஸ்டேட் வியாபாரம் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கிய அவர், தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்ற தகவலும் வெளியானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் ரயிலில் கைப்பற்றப்பட்ட விவகாரத்திற்கு அண்ணாமலையே காரணம் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே பனிப்போர் வலுத்து வந்தது.

பாஜக அதிமுக

இதேபோலவே, குறுகிய காலத்தில் அண்ணாமலையின் வளர்ச்சியை, வானதி சீனிவாசன், எல்.முருகன் போன்றவர்களும் ரசிக்கவில்லையாம்..

இதனிடையே தேர்தலுக்கு தயாராகும் வகையில் சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து, தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி அண்ணாமலை விலகினார்.

இந்த சூழலில், தமிழக பாஜகவிலேயே அண்ணாமலைக்கு எதிரான சில முக்கிய நிர்வாகிகள், அண்ணாமலைக்கு எதிராக தொடர் புகார்களை டெல்லி தலைமைக்கும் அனுப்பி வந்ததுடன், பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள கோவையில் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது, அப்படியே சீட் தந்தாலும் சொந்த மாவட்டமான கரூரில் நின்று வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்கட்டும் என்றும் சொல்லி வந்தார்களாம்.

எடப்பாடி பழனிசாமி

இதுஒருபுறமிருக்க, சோஷியல் மீடியாவில் வேறு சில யூகங்களும் கசிந்தவண்ணம் உள்ளன.. அதாவது "அண்ணாமலை அதிமுக தலைவர்களை இழிவாக பேசியது, எடப்பாடி பழனிசாமியை தற்குறி என விமர்சனம் செய்தது போன்றவை, எடப்பாடிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதனால் அண்ணாமலை மாநில தலைவராக இருந்த வரை பாஜகவுடன் உடன் கூட்டணி சேராத எடப்பாடி பழனிசாமி, அவரை மாற்றிய பிறகே கூட்டணி அமைத்தார். இப்போது அண்ணாமலையின் அன்றைய பேச்சிற்கு பதிலடியாக, அண்ணாமலைக்கு சீட் கிடைக்காத வகையில் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீட்டை முடித்திருக்கிறார்.

பாஜக மாநிலத் தலைமை மற்றும் அதிமுக தலைமை இணைந்து தனக்கு சீட் இல்லை என்று சொன்னால், தான் கட்டமைத்து வைத்துள்ள, இமேஜ்ஜுக்கு சேதங்களை ஏற்படுத்தும் என்பதால், தானாகவே தேர்தலில் போட்டியிடாமல் விலகியது போன்ற தோற்றத்தை உருவாக்க அண்ணாமலையும் முயற்சித்து வருகிறார்" என்றெல்லாம் இணையவாசிகளால் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இளைஞர்களின் எழுச்சி தலைவர்

மறுபுறம், அண்ணாமலைக்கு எதிரான இந்த அரசியல் நகர்வுகள் அவரது தீவிர ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.. தமிழக பாஜகவில் ஒரு புதிய எழுச்சியையும், இளைய தலைமுறையினரிடையே அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய அண்ணாமலைக்கு, அவரது சொந்தக் கட்சியினரே முட்டுக்கட்டை போடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

"மாநிலத் தலைவராக இருந்து கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ஒருவருக்கு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை வழங்காமல் ஓரங்கட்டுவது முறையல்ல" என்பதே தொண்டர்களின் வாதமாக உள்ளது.. குறிப்பாக, கோவையில் அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்கை மற்ற தலைவர்கள் கண்டு அஞ்சுவதாலேயே, திட்டமிட்டு அவரை தடுத்து நிறுத்துகிறார்கள் என்றும், இது தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்களும் கருத்து கூறுகிறார்கள்.

உண்மையிலேயே கோவைக்கு எதற்காக ஒரு சீட் தரப்பட்டது? அண்ணாமலைக்கு திட்டமிட்டு வாய்ப்பு மறுக்கப்பட்டதா? அல்லது யதேச்சையாக நடந்ததா? கோஷ்டி பூசல் காரணமா? அல்லது அதிமுகவை பழித்து பேசியது காரணமா? என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் கோவை களம் இப்போதே கொதிக்க துவங்கிவிட்டது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+