சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தொட்டு பாருங்க".. சசிகலா புஷ்பா பங்களாவில் பார்ட்டி?.. தெருவில் வீசப்பட்ட பொருட்கள்.. மேஜர் வார்னிங்

பாஜகவின் சசிகலா புஷ்பா மிகப்பெரிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: வேண்டும் என்றே யாராவது வதந்தியை பரப்பினால் அல்லது சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று வார்னிங் தந்துள்ளார் சசிகலா புஷ்பா.

ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்கு காத்திருந்த சசிகலா புஷ்பாவிற்கு, அதிமுக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட நட்பால் அதிமுகவில் இணைந்தார்.. அதன்பிறகு குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டார்.

குறிப்பாக, அதிமுக மகளிரணிச் செயலாளர், தூத்துக்குடி நகர மேயர் பதவி என பெரிய பெரிய பதவிகள் எல்லாம் வந்து சேர்ந்தன.. இதனிடையே, அதிமுக தலைமையின் நெருக்கம் ஏற்பட்டதன் காரணமாக 2014 ம் ஆண்டு, மேயராக இருக்கும் போதே ராஜ்யசபா எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

சூடுபிடிக்கும் கொடநாடு எஸ்டேட் வழக்கு.. ஜெயலலிதா, சசிகலா அறையில் சிபிசிஐடி ஆய்வு.. பின்னணி என்ன? சூடுபிடிக்கும் கொடநாடு எஸ்டேட் வழக்கு.. ஜெயலலிதா, சசிகலா அறையில் சிபிசிஐடி ஆய்வு.. பின்னணி என்ன?

 ஹை ஸ்பீடு

ஹை ஸ்பீடு

ஆனால் எந்த அளவுக்கு உச்சிக்கு போனாரோ, அதே வேகத்தில் தொப்பென்று கீழேயும் விழுந்தார் சசிகலா புஷ்பா.. ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டார்.. ஜெயலலிதா என்னை கன்னத்தில் அறைந்தார் என்று மாநிலங்களவையில் நின்று கொண்டு சசிகலா புஷ்பா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது., பிறகு, அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியது. சிறிது நாள் மோடி துதி பாடினார்.. அடுத்த சில நாட்களிலேயே பாஜகவில் இணைந்தார்.. இப்போது தமிழக பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவராகவும் உள்ளார்.

 அவென்யூ

அவென்யூ

எனினும், இப்போதும் இவர் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பி கொண்டுதான் இருக்கிறது.. கட்சி ரீதியாக சர்ச்சைகள் ஒருபக்கம் என்றால், இவரது கணவர், குடும்பம் தொடர்பாகவும் பரபரப்புகள் வெடித்து வருவது வாடிக்கையாகிவிட்டது... இப்போதும் அப்படித்தான் சசிகலா புஷ்பா குறித்த செய்தியால் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.. ராஜ்யசபா எம்.பியாக சசிகலா புஷ்பா தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு டெல்லியில் தங்குவதற்காக மத்திய அரசால் நார்த் அவென்யூவில் வீடு ஒதுக்கப்பட்டது.

 மது விருந்து

மது விருந்து

ஆனால் அவரது பதவிகாலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதற்காக சசிகலா புஷ்பாவிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.. இதனிடையே அவரது வீட்டில் அடிக்கடி மது விருந்து நடப்பதாகவும் இதனால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் புகார்களையும் அளித்து வந்தனர். ஆனால் இதை எதையும் கண்டுகொள்ளாத சசிகலா புஷ்பா, அந்த அரசு வீட்டையும் காலி செய்யாமல் இருந்ததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியேற்றிய அரசு அதிகாரிகள் வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர்.. இதுதான் சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

 ஹவுஸிங் போர்டு

ஹவுஸிங் போர்டு

ஆனால், இந்த தகவலை சசிகலா புஷ்பா மறுத்துள்ளதுடன், ஒரு முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது: "நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.. நாடாளுமன்ற எம்பியாக இருந்து அவர்களுடைய பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் எம்பிகளுக்கு கோட்டா என்று ஒன்று இருக்கிறது. அந்த அடிப்படையில், ஒவ்வொரு முன்னாள் எம்பிகளுக்கும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்து அந்த வீட்டில் இருக்கக் கூடிய வாய்ப்பை மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.

 சான்ஸூம் போச்சு

சான்ஸூம் போச்சு

நான் மட்டுமல்ல அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்பிக்களும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு காரணம் இருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த அடிப்படையில், அதற்கான சரியான காரணம் எனக்கு இருந்தது என்கின்ற அடிப்படையில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை அந்த வீடு புதுப்பிக்கப்பட்டது.. தூத்துக்குடியில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதாலும் இங்கு அதிகமான வேலைகள் இருந்ததால் நான் டெல்லிக்கு இப்போது அடிக்கடி செல்லவில்லை, அந்த வீடு அரசுக்கு சொந்தமானது.

வார்னிங்

வார்னிங்

ஆனால், வேண்டும் என்றே, அதிலும் ஒரு பெண்ணை வேண்டும் என்றே ஒரு வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று காட்டமாக எச்சரித்துள்ளார் சசிகலா புஷ்பா.

English summary
Big warning: officials vacate and seal sasikala pushpa government residence delhi, what happened actually
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X