சம்யுக்தாவின் ஒரிஜினல்.. வெளியே எட்டி பார்த்த பூனைக் குட்டி.. மிரண்டு போன ரசிகர்கள்!
பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக கோபத்துடன் பேசினார் சம்யுக்தா
சென்னை: ஒருவழியாக சம்யுக்தா வாய் திறந்துவிட்டார்.. கோபம் என்ற பூனைக்குட்டி நேற்று பொத்து கொண்டு வெளியே வந்துவிட்டதைதான் பிக்பாஸ் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பிக் பாஸ் வீட்டில் பாலா - அர்ச்சனா பஞ்சாயத்தும், சனம் - சம்யுக்தா பஞ்சாயத்தும்தான் ஹாட்டாக பேசப்பட்டு வருகிறது.

வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் டீமில் உள்ள பாலா, அதை செய்யாமல் போய் தூங்கி விட்டார். இதை பார்த்தது அர்ச்சனா தட்டிக் கேட்க, அவருக்கும் பாலாவுக்கும் முட்டிக் கொண்டது.. ஏற்கனவே பாலா பேசியதில் கொஞ்சம் அப்செட்டாக இருந்த நிலையில், அர்ச்சனாவுக்கு நேற்று இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது.
ஆனால், அசால்ட் பாலா இதையும் கண்டுகொள்ளவில்லை.. எப்போதும் போல கெத்தும், திமிரும் வெளிப்பட்டவாறே நடந்து கொண்டார்.. அந்த நேரம் பார்த்து ரியோ வந்துஏதோ கேட்க, ரியோவுக்கும் அதுபோலவே நோஸ்கட் பதிலை சொல்லிவிட்டு நகர்ந்தார் பாலா.
நேற்றுகூட, "கேப்டன் பண்ணது எனக்கு புடிக்கல, அதனால எனக்கு கேப்டனை புடிக்கல" என்று பாலா சொல்லவும், அர்ச்சனா பாய்ந்து கொண்டு வந்தார்.. "சொல்லிட்டாருங்க பாலா சார், பாலா சார் வருவாரா? பாலா சார் வருவாரா?ன்னெல்லாம் எங்களால வெயிட் பண்ண முடியாது" என்று டெரர் பதிலை சொன்னார்.
பிறகு வீட்டில் தங்க சுரங்கத்தில் இருரந்து அதிக தங்கத்தை எடுத்து பாதுகாக்கும் டாஸ்க் நடந்தது.. பாலா ப்ளே ரூமில் செல்லும்போது சனம் அவரை தடுத்து நிறுத்தவும், அது ஒரு பிரச்சனையாக வெடித்தது. அப்போதுதான், ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சம்தியுக்தா, "நீ யாரு கேக்குறதுக்கு... எப்பவுமே நீ இப்படித்தான்.. ஏதாவது சொல்லலன்னா அந்த விஷயம் நடக்கவே நடக்காது பாரு.. நீயும் கன்டஸ்டன்ட்தானே? ஏன் எங்களை சொல்கிறாய்? என்ன நடந்தாலும் நீதான் பேசணும், நீதான் அதில் வந்து தலையிடணுமா?" என்று கத்தினார்.
இத்தனை நாள் சிரித்து சிரித்து கிறங்க வைத்து கொண்டிருந்த சம்யுக்தாவா இது என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் இதை பார்த்தனர்.. இவர் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருப்பதாக அடிக்கடி புகாரும் எழுந்து வந்த நிலையில், நேற்று பொத்துக் கொத்து வந்த சம்யுக்தாவின் கோபத்தை பார்த்து வீட்டில் உள்ளவர்களே மிரண்டு போய்விட்டனர்.
யாராக இருந்தாலும் சரி, எந்த வித இயல்பையும், ரொம்ப நாளைக்கு ஒளித்து வைக்க, மறைத்துவைக்க முடியாது என்பதைதான் சம்யுக்தாவின் கோபம் நேற்று வெளிப்படுத்தியது.. இன்னும் எத்தனை பேரின் ஒரிஜினல் வெளியே வர போகுதோ என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications