சொன்னபடியே செய்த பிக்பாஸ் பாலாஜி.. போலீஸ் வந்த சிசிடிவியை ரிலீஸ் பண்ணிட்டாரே.. பெரிய ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் 'ஃபயர்' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவரது வீட்டில், தீபாவளி பண்டிகையன்று நள்ளிரவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது நடந்த சம்பவங்கள், போலீசாருடன் அவர் வாக்குவாதம் செய்த வீடியோ, போலீசாரின் விளக்கம் மற்றும் தற்போது பாலாஜி வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் தொடக்கம் முதல் இப்போது வரை என்ன நடந்தது என்பதை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

Balaji Murugadoss Bigg Boss

நள்ளிரவில் புகுந்த போலீசார் - பின்னணி என்ன?

தீபாவளி பண்டிகை இரவில் பாலாஜி முருகதாஸ் வீட்டிற்கு 15-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் சென்றனர். அவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததாக கூறப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையிலேயே போலீசார் அவரது இல்லத்திற்கு சென்று சோதனையை தொடங்கினர்.

வீட்டில் நடந்தது என்ன? பாலாஜியின் வாக்குவாதம்

போலீசார் திடீரென வீட்டிற்குள் வந்தபோது, பாலாஜி முருகதாஸ் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார்.

அப்போது போலீசார், "நீங்கள் வீடியோ எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் நாங்களும் வீடியோ எடுப்போம்" என்று தடுத்தனர். அதற்கு பதிலளித்த பாலாஜி, "தாராளமாக எடுங்கள். என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. வீட்டை முழுமையாக சோதித்துப் பாருங்கள்" என்று சவால் விடுத்தார். மேலும், "என் மீது சந்தேகம் இருந்தால் இப்போதே எனக்கு ரத்தப் பரிசோதனை கூட செய்து கொள்ளுங்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் போலீசாருக்கு எந்தவித போதைப்பொருளோ அல்லது தடை செய்யப்பட்ட பொருளோ கிடைக்கவில்லை. இதனை குறிப்பிட்ட பாலாஜி, "15 போலீசார் வந்து என் வீட்டில் தேடி கடைசியில் பார்த்தது மூன்று பூனைகளையும், ஒரு நாயையும் மட்டுமே" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

"யார் கொடுத்த புகார்?" - பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகள்

சோதனை முடிந்த பின் பாலாஜி வெளியிட்ட பதிவில் பல கடுமையான கேள்விகளை முன்வைத்தார். எந்தவித தேடுதல் வாரண்ட்டும் இல்லாமல் போலீசார் வீட்டிற்குள் நுழைந்தனர். என் மீது யார் புகார் கொடுத்தார்கள், எதன் அடிப்படையில் வந்தார்கள் என்று பலமுறை கேட்டும் போலீசார் விளக்கம் அளிக்கவில்லை.

ஒரு தொலைபேசி அழைப்பை மட்டுமே நம்பி இப்படி நள்ளிரவில் அத்துமீறி வந்தது நியாயமா? இந்த சோதனையால் அக்கம் பக்கத்தில் அவப்பெயர் ஏற்பட்டு, வீட்டு உரிமையாளர் என்னை வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். என் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு?" என்று அவர் கொந்தளித்தார்.
மேலும், இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும் எச்சரித்தார்.

போலீசாரின் அதிகாரப்பூர்வ விளக்கம்

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்: போதைப்பொருள் புழக்கம் குறித்து வந்த குறிப்பிட்ட ரகசிய தகவலின் பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது. 15 போலீசார் செல்லவில்லை; உரிய அதிகாரிகள் மட்டுமே சட்ட விதிகளுக்கு உட்பட்டு சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் எதுவும் சிக்காததால் காவலர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டனர் என்று காவல்துறை தெரிவித்தது.

ஆனால், இந்த விளக்க அறிக்கையில் பாலாஜியின் குடியிருப்பு முகவரி விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டு, அது மேலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

சிசிடிவி ஆதாரத்தை வெளியிட்ட பாலாஜி

காவல்துறையின் அறிக்கையை முற்றிலும் மறுத்த பாலாஜி முருகதாஸ், "அவர்கள் சொல்வது அப்பட்டமான பொய்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தனது வீட்டு வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை தற்போது ஆதாரமாக அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் போலீசார் திரளாக வீட்டிற்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள பாலாஜி, "காவல்துறையின் இந்த செயல்பாடு எவ்வளவு தவறானது என்பதை இந்த சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்திய விவகாரம், பாலாஜி வெளியிட்டுள்ள சிசிடிவி ஆதாரத்தால் தற்போது சட்டரீதியாகவும் பொதுவெளியிலும் அடுத்த கட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+