Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் பறவைகளாக வருவாங்கன்னு நினைச்சா... சண்டை கோழிகளாக சிலிப்பிட்டு நிக்கறாங்களே

சனமும் பாலாஜியும் காதல் பறவைகளாக பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வருவார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் தேர்தல் ஒருபக்கம் பரபரப்பை கிளப்ப,அமெரிக்க தேர்தல் அனல் பறக்க பிக் பாஸ் வீட்டிற்குள் எதுவுமே தெரியாமல் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் அவ்வப்போது சண்டை போட்டு சூட்டை கிளப்பி வருகிறார்கள். காதல் பறவைகள் முக்கோண காதல் கதையாக மாறும் என்றெல்லாம் பார்வையாளர்கள் எதிர்பார்த்த சனம் பாலாஜி ஜோடி இப்போது சண்டைக்கோழிகளாக சிலிப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்க ஷிவானி பாலாஜி இடையே ஏதோ இருக்கு என்று சுச்சி கொளுத்திப்போட்டது சுரேஷ் சக்கரவர்த்திக்கு கோபத்தை வரவழைக்கவே காரியே துப்பி விட்டார். இந்த சண்டைகள் நீடிக்குமா?அல்ல சமாதானக்கொடியை பறக்கவிடுவார்களா? பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டில் நிறைய காதல் உருவாகும் பரபரப்பாக பேசப்படும் அப்புறம் அது அடங்கிவிடும் யாரோ யாரையோ கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள். கடந்த கால சீசன்களில் காதல் பறவைகளாக வலம் வந்தவர்கள் ஒட்டி உறவாடியவர்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் வெட்டிக்கொண்டு போய் விட்டனர். இதை நன்றாக அறிந்து கொண்டனர் பார்வையாளர்கள். இருந்தாலும் வீட்டிற்குள் ஒரு எண்டர்டெயின்ட் மெண்ட் வேண்டாமா? இந்த சீசனிலும் காதலும் மோதலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வாரத்தில் இருந்தே பாலாஜி மீது கடுப்பில் உள்ளார் சனம். நேற்றைய எபிசோடில் லேட் நைட்டில் கார்டன் ஏரியாவில் சனம் ஷெட்டியும் பாலாஜியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சனம் ஷெட்டி, எனக்கு உங்களை பிடிக்கவில்லை. நீங்கள் ஸ்ட்ரேட்டர்ஜிக்குகாக பேசுவது ஹர்ட்டாக்குகிறது என்றார் சனம்.

பேச மாட்டேன் போ

பேச மாட்டேன் போ

உங்களிடம் ஸ்ட்ரேட்டர்ஜியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நீயேல்லாம் என் லிஸ்ட்டிலேயே இல்லை என அசிங்கப்படுத்தினார் பாலாஜி. தொடர்ந்து எனக்கும் உங்களை சுத்தமாக பிடிக்கவில்லை. உங்களிடம் பேசவே பிடிக்காது என்றார் பாலாஜி. அதற்கு சனம். நீங்கள் ஒரு விஷயம் செய்தால் அதன் பின்னால் ஒரு காரணம் இருக்கும். எனக்கு எமோஷன்ஸ் ரியலா இருந்ததான் பிடிக்கும். இனிமே நான் உங்களிடம் பேச மாட்டேன் என்றார் சனம்.

எட்டி உதைத்த சனம்

எட்டி உதைத்த சனம்

அதற்கு பேச வேண்டாம். உண்மையிலேயே நீ போகாதது எனக்கு வருத்தம் தான், எப்படி மிஸ்ஸானது என்று தெரியவில்லை. சீக்கிரம் கிளம்பு.. என் பார்வையில் இருந்து போய் தொல என்று சொன்னார். நான் ஏன் போறேன்... நீ போ என்று சொல்லிய
சனம், பாலாஜி நடந்து போகும் போது அவரது பின்னால் விளையாட்டாக உதைத்தார். அதற்கு சிரித்தப்படியே உள்ளே சென்றார் பாலாஜி.

சண்டை ஆரம்பம்

சண்டை ஆரம்பம்

விடிய விடிய என்னென்னவோ பேசி விடிந்த பின்னர் கிச்சனில் சண்டை ஸ்டார்ட் ஆனது. சனம் ஷெட்டியிடம் தருதலைன்னா என்னன்னு தெரியுமா என்று பாலாஜி கேட்க. அதற்கு தெரியாது என்று கூறினார் சனம். அதற்கு நீதான் என பதிலளித்தார் பாலாஜி. அதற்கான சரியான அர்த்தத்தை சுச்சி, ரம்யா, அனிதா ஆகியோர் சனத்திடம் கூறினர். இதனால் கடுப்பான சனம் ஓவர் கான்ஃபிடன்ஸ், உங்களுடைய கான்ஃபிடன்ஸை பிஹேவிங்கிலும் வார்த்தையிலும் காட்டுங்கள் என்றார்.

அப்போ சிரிச்சியே

அப்போ சிரிச்சியே

மல்லுக்கட்டுக்கு தயாராக இருந்த பாலாஜி, ஏய் என்னா விட்டா பேசிக்கிட்ட போற என சனம் ஷெட்டியிடம் நெருக்கமாக சென்று அடிப்பது போல் பேசினார். அப்போது ஏன் வார்த்தையை விடுறீங்க.. அறிவில்ல என மீண்டும் கேட்டார் சனம். அதற்கு பாலாஜி, நேத்து நைட்டு ஏன் என்கிட்ட வந்த? எதுக்கு பேசுன என்கிட்ட? நேற்று இரவு யார் என்னிடம் பேசினது? யார் என்னை பின்னால் உதைத்தது? என திருப்பி திருப்பி அதையே ஆவேசமாக கேட்டார் பாலா. நான் உதைத்தது உனக்கு வலிக்கிறது என்றால் அப்போவே சொல்ல வேண்டியதுதானே, அப்போ ஏன் சிரித்துவிட்டு போனாய் என கேட்டார் சனம்.

வா வந்து உதைச்சிட்டு போ

வா வந்து உதைச்சிட்டு போ

அவ என்ன பெரிய இவளா? பேச மாட்டேன்னா போக வேண்டியதுதானே எதுக்கு என்னை உதைச்சா? இதுவே பையனா இருந்தா செவுல்லேயே விட்ருப்பேன் என்று சொல்ல சண்டை உக்கிரமானது. யார் என்ன சொன்னாலும் அதை கேட்காமல் கோபத்தோடு பேசிக்கொண்டே இருந்தார் பாலாஜி. நான் உதைத்தால் சும்மா விடுவாங்களா என்று பாலாஜி கேட்க, அதற்கு சனம் வாப்பா வந்து உதைச்சுட்டு போ.. உதைச்சுட்டு பிரச்சனையை முடிச்சுடுப்பா என்றார். அதற்கு என்னை வைத்து கன்டென்ட் தேடாதே என்றார் பாலாஜி.

பற்றிக்கொண்ட சண்டை

பற்றிக்கொண்ட சண்டை

உன்னை வைத்து கன்டென்ட் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை.. எனக்கு கன்டென்ட்டா பல விஷயம் இருக்கு உனக்கு கேமராதான் பிரச்சனைன்ன நீ வெளியே போ என சனம் சொல்ல.. நீ போய் தொலை என பாலாஜி சொல்ல. சண்டை பற்றி எரிந்தது. இவர்கள் சண்டை இப்படி என்றால் சுரேஷ் சக்ரவர்த்தியின் கோபம் வேறு மாதிரியாக இருந்தது.

ஓயாத பிரச்சினை

ஓயாத பிரச்சினை

சுசித்ரா, ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது மாதிரியான தகவலை கூறி நன்றாகவே குழப்பிக் கொண்டிருந்தார். நேற்று சம்யுக்தாவும், ஷிவானியும் பேசி கொண்டிருக்கும் போது, உள்ளே வந்த சுரேஷ், ஒரு தாய்,தகப்பனுக்கு பெண் குழந்தை ரொம்ப முக்கியம் அதை விட்டுக் கொடுத்து பேசுவதாக இருந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என பேசிவிட்டு, இது என்ன உயிர் இல்லாத ஜடமா? இது கம்மாடிட்டியா? கன்டன்ட் கொடுக்கிறதா என ஷிவானியை கூறி காரி துப்பிவிட்டு சென்றார் சுரேஷ்.

ஒண்ணும் புரியலையே

ஒண்ணும் புரியலையே

அதைப்பார்த்த ஷிவானி, என்ன இவர் இப்படி பேசுகிறார் என்று யோசித்து புரியாமல் பாலாஜியிடம் கேட்டார், அவர் சொன்ன விளக்கமும் புரியாமல் சுரேஷிடமே சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சரணடைந்தார். அதற்கு சுரேஷ் பாலாஜியை பற்றி புகழ்ந்து சொல்லி உன்னையும், பாலாஜியையும் சேர்த்து வைத்து வெளியே பேசுவதாக சுச்சி கூறியதாகவும், இதை கண்டென்டாக வெளியே பார்க்கிறார்கள் என்று கூறியதாகவும் ஷிவானியிடம் கூறிக்கொண்டிருந்தார். சுசித்ரா என்னிடம் நீங்க உதவி செய்ய வேண்டியது தானே என்று கூறியதும் எனக்கு கோவம் வந்து எழுந்து சென்றுவிட்டேன் என்றார்.

பற்றி எரியும் வீடு

பற்றி எரியும் வீடு

அதை கேட்டு ஷிவானி அமைதியாக அமர்ந்திருந்தார். அதை தொடர்ந்து பாலாஜி, தனது பங்கிற்கு சுரேஷ் பற்றி சுசித்ராவிடம் போட்டுக்கொடுக்க, கடுப்பானார் சுசித்ரா. எப்படியோ நாரதர் கலகம் போல சுசித்ரா ஆரம்பித்து வைத்தது பிக்பாஸ் வீட்டிற்குள் பற்றி எரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+