பிக்பாஸ் "விக்ரமன்" அந்த பெண்ணை.. "தலித் கார்ட தூக்கிட்டு வந்துட்டியா".. என்ன செய்ய போகிறார் திருமா
சென்னை: விசிக விக்ரமன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை, பெண் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தநிலையில், அதுகுறித்த உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை பெண்கள் அமைப்பினரிடமிருந்து எழுந்துவருகிறதாம்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6, நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன்.. சிறுவயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டி வருபவர்..

அத்தனை போட்டியாளர்களுக்குள் ஒருவராக, இவரும் கலந்து கொள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர். ஏற்கனவே, டிவி விவாதங்கள் மற்றும் ட்விட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்ததால், பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்சென்றதுமே, அவர்மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
யார் பெண் வழக்கறிஞர்: "அறம் வெல்லும்" என்று கூறியபடியே, தமிழக மக்களின் பெருவாரியான ஆதரவையும் நிகழ்ச்சியின் இறுதிவரை பெற்றார்.. இந்நிலையில், இவர் மீது லண்டனில் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பயின்று வரும் கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர், 2 நாட்களுக்கு முன்பு பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருந்தார்.. அது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு கடிதம் மூலமும், அந்த குற்றச்சாட்டுகளை அனுப்பியிருந்தார்.
"மதிப்பிற்குரிய தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு, "என் பெயர் கிருபா முனுசாமி. உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த நான் கடந்த 2020ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சமூக நீதி அமைச்சகத்தின் மூலம் இலண்டனில் சட்டத் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். நான் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து நீதிமன்றங்களிலும் பொதுத்தளங்களிலும் தொடர்ந்து, செயல்பட்டு வருகிறேன் என்பது தாங்கள் உட்பட என்பது பலரும் அறிந்ததே!
தங்கள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலமாக என்னுடன் நட்பாய் இருந்து நான் இலண்டனுக்கு சென்றபிறகு என்னை காதலிப்பதாக கூறினார். அவருக்கும் முற்போக்கு அரசியலில் பிடிப்பிருந்தது போல தோன்றியதால் நான் சம்மதித்தேன். நாங்கள் பழகி வந்த இந்த மூன்று ஆண்டுக்காலத்தில் என்னை பலமுறை வேசி என்றும், பிற ஆபாச வார்த்தைகளாலும் அவமானப்படுத்தியிருக்கார்.
அரசியல் ஆதாயம்: ஒரு தலித்தாக இருப்பதினாலேயே எனக்கு அரசியல் ஆதாயம் கிடைப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார். அதையும் மீறி அவருடைய கிரெடிட் கார்டில் ரூ.80000- ஏன் செலவு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, "நீயே போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து கவர்மன்ட்டை ஏமாற்றி ஸ்காலர்ஷிப் வாங்கி ஓசி சோறு சாப்புட்ற" என்று கீழ்த்தரமாக பேசினார். அதுமட்டுமல்லாது. நான் விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து, அவருடைய தங்கையையும், தாயையும் வன்புணர்வு செய்து விடுவேன் என்று குற்றம் சாட்டினார்.
இது போல செட்டியார் ஜாதியில் பிறந்த அவருடைய ஜாதிய சிறப்புரிமைகளை குறிப்பிடும் போதும், என்னை ஜாதிய ரீதியில் அவர் தாக்குவதை குறிப்பிடும் போதும், அவ்வளவு தான் உன் தலித் கார்ட தூக்கிட்டு வந்துட்டியா என்று ஒரு தலித் பெண்ணாக என்னுடைய வாழ்வனுபவத்தை கொச்சைப்படுத்தியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார். என்னை மட்டுமல்லாது தங்களுடைய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குறித்தும் என்னிடம் அவதூறாக பேசியிருக்கிறார்.
ஜாதீய ஒடுக்குமுறை: இதுபோல கடந்த மூன்று ஆண்டுகளின் என்னை பலவிதமான குற்றவுணர்ச்சிகளுக்கு ஆளாக்கி ஜாதிய ஒடுக்குமுறையை குறித்தோ, ஒரு தனி மனிதராக என்னுடைய சுய மரியாதையை குறித்தோ பேசுவதே தவறு என்ற உணர்வு வரும் நிலைக்கு என்னை தள்ளினார். இவருடைய உளவியல் ரீதியான ஒடுக்குமுறையினால் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்திலேயே என்னை வைத்திருந்தார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு மனநல நிபுணரிடன் சிகிச்சைப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.
என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, ஜாதிய ரீதியில் அசிங்கமாக பேசி, இதுவரையிலும் 12 இலட்சத்திற்கு மேல் பணம் பறித்து. உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்துக்கொள்ள தூண்டிய விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவை அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஒரு உச்சநீதிமன்ற வழக்கறிஞரான, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஜாதிய சட்ட வல்லுனரான, ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாட்டாளரான, அரசியல் ரீதியான இத்தனை தொடர்புகள் உள்ள தலித் பெண்ணாகிய என்னையே விசிகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விக்ரமன் இவ்வளவு தைரியமாக இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கியிருந்தால் இன்னும் சாதாரண பெண்களின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
முற்போக்குவாதி: எனவே, அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன். வெளியில் முற்போக்குவாதியை போலவும், அரசியல் நேர்மையுடைவர் போலவும் நடந்துக்கொண்டு, தனிப்பட்ட முறையில் இத்தகைய அருவறுப்பான செயல்களை நிகழ்த்தும் விக்ரமன் மீது தாங்கள் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காவிடில் அது தலித் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கும் கட்சியின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி விடும் என்று எழுதியிருந்தார்..
விக்ரமன் மீதான குற்றச்சாட்டு, தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்த புகாரை கிளப்பிய கிருபா முனுசாமி, சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கிவருவர்.. தலித் செயற்பாட்டாளரும்கூட.. விசிக மற்றும் திருமாவளவனின் தீவிர ஆதரவாளர் எனப்படுகிறார்.. மத்திய அரசு உதவித் தொகையில், இப்போது லண்டனில், சட்டத் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.. இதையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு, விக்ரமன் மறுப்பு தெரிவித்து, கருத்து கூறியுள்ளார்..
உண்மையா? பொய்யா?: அதாவது, கிருபா முனுசாமி திட்டமிட்டே தன் மீது அவதூறு வழக்குகளை பரப்புவதாகவும், சாதி முறையான அடக்குமுறைகளை கனவிலும் கூட நினைத்தது இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். ஆனால், விக்ரமன் மீது புகார் அளித்தும், இதுகுறித்து இதுவரை எந்த கருத்தையும் திருமாவளவன் தெரிவிக்கவில்லை.. எனவே, விசிகவையும், திருமாவளவனையும் தீவிரமாக ஆதரிக்கும் பெண்களும், பெண்கள் அமைப்பினரும், தலித் செயற்பாட்டாளர்களும், கிருபா முனுசாமியின் குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை கோரி வருகிறார்களாம்..
தேர்தல் சமயம் நெருங்கி வரும் சூழலில், இந்த புகாரானது, கட்சிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், விக்ரமன் மீதான புகாரில் உண்மைத்தன்மை என்ன? என்பதை கண்டறிய வேண்டும் என்றும், இதில் யார் பக்கம் தவறு உள்ளது என்பதை கண்டறிந்து நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வருகிறார்களாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications