"பெரிய சம்பவம்.." காவேரி நீர்பிடிப்பு பகுதியில் கொட்ட போகுது மழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், கேரளா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழையின் முக்கிய காலகட்டம் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த கோடை வெப்பம் கடந்த மாதம் தான் முடிந்தது. அதிலும் கடந்த மாதம் கூட முதல் இரண்டு வாரங்கள் வெப்பம் நம்மை வைத்துச் செய்துவிட்டது. அதன் பின்னரே மழை ஆரம்பித்தது.

குறிப்பாகக் கடந்த மாதம் இரண்டாம் வாரத்தில் கனமழை பெய்துவிட்டது. ஜூலை மாதம் சராசரியைக் காட்டிலும் மழை அதிகமாகக் கொட்டி தீர்க்க இந்த நாட்களில் பெய்த மழையே முக்கிய காரணமாக இருக்கிறது..
தமிழ்நாடு வானிலை: இதற்கிடையே தமிழ்நாட்டில் இப்போது தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. பொதுவாகத் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் ஆரம்பித்து அப்படியே செப். மாதம் வரை 4 மாதங்களுக்குத் தொடரும். கோடைக்குப் பிறகு பெய்யும் இந்த தென்மேற்கு பருவமழை வெப்பத்தைக் கணிசமாகவே குறைக்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் தென்கிழக்கு பருவ மழையை மக்கள் ஆர்வமாக எதிர்நோக்கி இருப்பார்கள்.
பொதுவாகவே தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி, டெல்டா பகுதிகளில் மழை பெய்யும். இதற்கிடையே தென்மேற்கு பருவமழையால் எங்கெல்லாம் வரும் நாட்களில் கனமழை இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இன்றைய தினம் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் டெல்டா பகுதிகளில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வெதர்மேன் தகவல்: இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "வட தமிழகம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கடலூர், டெல்டா பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்குச் சரியான நாள்.. இன்று இரவு இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "கேரளா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், அவலாஞ்சி- முக்கூர்த்தி- மேல் பவானி, பந்தலூர்-கூடலூர் வால்பாறை, கன்னியாகுமரி பகுதிகளில் பருவமழையின் மிகப்பெரிய நிகழ்வு, ஜூலை 3-9 வரை வர உள்ளது. இந்த நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வால்பாறை, வயநாடு, இடுக்கி, குடகு, கூடலூர், நீலகிரி பகுதிகளில் உள்ள செல்வதைத் தவிர்க்கவும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னை வானிலை மையம்: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேல் வளி மண்டல சுழற்சி காரணமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக. இன்று, ஜூலை 1இல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications