Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைக் டாக்ஸி குறித்து புகார் அளித்த ஆட்டோ டிரைவர்கள்.. வெகுண்டெழுந்த நெட்டிசன்கள்.. இவ்வளவு கோபமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைக் டாக்ஸி குறித்து புகார் அளித்த ஆன்லைனில் ஆட்டோ ஓட்டும் ஆட்டோ டிரைவர்கள் இன்று டிரெண்டிங் ஆகி உள்ளனர்'.. காரணம் ஆட்டோ டிரைவர்கள் குறித்து நெட்டிசன்கள் பலர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்..

ரேபிடோ, ஓலா போன்ற பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கார் மற்றும் ஆட்டோவை தாண்டி, பைக் டாக்ஸி சேவையையும் வழங்கி வருகிறார்கள். ஒருவர் மட்டுமே செல்கிறார்கள் என்றால், முன்பு ஆட்டோவில் செல்ல மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது முற்றிலுமாக குறைந்துள்ளது. இது ஆட்டோ ஓட்டுநர்களை வெகுவாக பாதித்துள்ளது.

Bike taxi row Many netizens are making serious allegations about auto drivers in Chennai

இதுபற்றி சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் வேதனையுடன் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பைக் டாக்ஸிக்கு இந்தியா முழுவதும் எங்குமே அனுமதி இல்லை.. இந்த பைக் டாக்ஸியை வைத்து இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பயணிகளிடம் ஏற்றி செல்வது என்பது வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவிற்கு இஎம்ஐ கட்ட முடியாமல், குடும்பத்தை பார்க்க முடியாமல், ரொம்ப சிரமமான கட்டத்தில் இருக்கிறோம்.. இந்த பைக் டாக்ஸி ஓட்டினால் உங்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்.. அப்படி சொல்லி, போலியான வாக்குறுதிகளை கொடுத்து, படித்த இளைஞர்கள் நிறைய பேரை ஒரு உறுதி இல்லாத தொழிலுக்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அழைத்து வருகிறார்கள்..

பைக் டாக்ஸியால் வெளிவந்த உண்மை.. சென்னை கமிஷனர் ஆபிஸில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்

இந்த பைக் டாக்ஸியால் நிறைய மரணங்கள் நடந்துள்ளது. பாலியல் தொல்லைகள் நடந்துள்ளன. எந்த ஒரு முறையான அனுமதியும் இன்றி, இந்த தொழிலை செய்து எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்குறாங்க.. பொதுமக்கள் ஆட்டோவில் மீட்டர் போட மறுப்பதாக எங்களை குற்றச்சாட்டுகிறார்கள்.. ஆனால் அரசு மீட்டர் கட்டணத்தை முறைப்படி நிர்ணயித்து, ஒழுங்குப்படுத்தினால் நாங்கள் அதன்படி ஆட்டோவை ஓட்ட தயாராக உள்ளோம்..

Bike taxi row Many netizens are making serious allegations about auto drivers in Chennai

ஆன்லைன் முறையில் ஆட்டோ ஓட்டும் எங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களுக்கு 2013ல் அரசு நிர்ணயம் செய்த மீட்டர் கட்டணத்தை தான் தருகிறார்கள்.. அந்த கட்டணத்தில் தான் நாங்கள் ஆட்டோ ஓட்டுகிறோம்.. பைக் டாக்ஸிக்கு அனுமதியே இல்லாத நிலையில், பைக் டாக்ஸில் இரண்டு பேரை ஏற்றிச்செல்கிறார்கள்.. பெர்மிட்டே இல்லாமல் இந்த வேலையை செய்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த புகார் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், நெட்டிசன்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.. பொருளாதார நிபுணரான ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி இதுபற்றி வெளியிட்ட பதிவில், 1. Ola/Uberல புக் பண்ணினா கூட 50/100 ரூபாய் கூடுதலா குடுத்தாதான் வருவேன்னு சொல்றது.
2. 2 கிலோமீட்டர் தூரத்துக்கு 300 ரூபாய் கேக்குறது.
3. ஏர்போர்ட் பக்கம் வண்டி ஏறினா குறைந்தபட்சம் 1000 ரூபாய் வேணும்னு கேக்குறது.
4. Ola/Uberல புக் பண்ணினா நாமளா ஃபோன் பண்ணி கேக்குற வரைக்கும் அங்கேயே நிக்கிறது.
5. ஸ்டேன்ட் ல இருந்து கிளம்பினா அதுக்கொரு பிரீமியம் சார்ஜ்.
6. ஆன்லைன் payment வாங்க மாட்டேன்னு சொல்றது. கேஷ் இருந்தாதான் வண்டி வரும் என்று கண்டிஷன் போடுறது.

இப்படியெல்லாம் மக்களோட வயிதெரிச்சலா வாங்கி கொட்டிக்கிட்டா, இப்படிதான் புலம்பனும். என்னதான் கேக்க கஷ்டமா இருந்தாலும், இவங்களுக்கு இது தேவைன்னு தான் தோணுது.

அந்த அளவுக்கு அழிச்சாட்டியம் பண்ணியிருக்காங்க. நிறைய சமயங்கள்ல ரயில்வே ஸ்டேஷன்/ ஏர்போர்ட் போகுறதுக்கு புக் பண்ணினா 7/8 புக்கிங் கேன்சல் ஆகி தான் போகவே முடியும். பல சமயங்கள்ல, untime ல புக்கிங் இருந்தா, வீட்டுக்கு வந்த பிறகு, 500/1000 கூடுதலா குடுன்னு கேட்டுருக்காங்க. நீங்கள் வாடிக்கையாளர்களுடன் அனுதாபம் கொள்ளத் தொடங்காத வரை, இந்த நிலை அப்படியே இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி மட்டுமல்ல பல நெட்டிசன்கள் ஆட்டோ ஓட்டுர்களின் செயல்களை பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.. ஆட்டோல மீட்டர் ஒன்னு இருக்குறதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.. கவர்ன்மென்ட்டும் அத கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது... அதனால் எல்லாத்தையும் ரேபிடோ, ஓலா மேல எழுதுறாங்க. ஒருத்தர் கூட உங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க.. ஏன் என்றால் உங்க வரலாறு அப்படி.. ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.


இன்னொரு நெட்டிசன், 5km - 300ரூபாய் வாங்குறானுக... அதே Rapido வெறும் 70 வாங்கி வீட்டுக்கு பக்கத்துலையே ட்ராப் பண்றானுங்க.. நீங்க ஒழுங்கா இருந்தா மக்கள் ஏன்யா Rapidoவ செலக்ட் பண்ண போறாங்க.. ? மனசாட்சியோட நீங்க நடக்கலைனா இப்படித்தான் நடக்கும் என்று கூறியுள்ளார்.. ஒரு இடத்துக்கு போனும்னு ரேட் கேட்டா நீங்க என்னிக்கு அங்க இருந்து நீங்க திரும்ப ரிட்டர்ன் வரதுக்கான ரேட்டயும் சேர்த்து சொல்றத நிப்பாட்டுறீங்களோ… அப்ப நாங்க ஆட்டோல ஏறுறோம்… என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். வெளியூரில் இருந்து தலைநகர் வரும் பயணி 300 ரூ 400 ரூ கொடுத்து பஸ்ஸில் வந்து ஆட்டோவிற்கு 400 ரூபாய் கொடுக்கும் போது எவ்வளவு வலிக்கும் என்பது கொடுப்பவர்களுக்கு தான் தெரியும். வாங்கும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்..


அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் ஒன்றிணைந்து, சரியான, முறையான மக்களுக்கும், உங்களுக்கு பாதிப்பில்லாத நஷ்டம் இல்லாத கட்டணத்தை நிர்ணயித்து, பிறகு இவ்வாறு குறைகள் கூறுங்கள்.. OLA,UBER,RAPIDO உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த கட்டணம் எப்படி கொடுக்கிறார்கள் என்பதை பற்றி சிந்தியுங்கள் என நெட்டிசன் ஒருவர் அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+