பைக் டாக்ஸியால் வெளிவந்த உண்மை.. சென்னை கமிஷனர் ஆபிஸில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்
சென்னை: ரேபிடோ, ஓலா போன்ற தனியார் நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவை காரணமாக எங்கள் குடும்பங்களை காப்பாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று ஆட்டோ ஓட்டுர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.. ஆட்டோ ஓட்டுநர்கள பலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுபற்றி புகார் அளித்துள்ளனர்.
ராபிடோ, ஓலா போன்ற பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கார் மற்றும் ஆட்டோவை தாண்டி, பைக் டாக்ஸி சேவையையும் வழங்கி வருகிறார்கள். ஒருவர் மட்டுமே செல்கிறார்கள் என்றால், முன்பு ஆட்டோவில் செல்ல மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது. 10 கிமீ தூரம் சென்றால், 900 வரை கொடுக்க வேண்டியதிருக்கும்.

இப்போது வெறும் 200 ரூபாயில் செல்லும் அளவிற்கு இருக்கிறது. இதேபோல் 5km - 300ரூபாய் ஆட்டடோவில் என்றால் அதே ரேபிடோவில் வெறும் 70 வாங்கி வீட்டுக்கு பக்கத்துல் இறங்கி கொள்ள முடிகிறது. இதனால் சிங்களாக செல்லும் பலர் ரேபிடோ மற்றும் ஓலா உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவையை நாட தொடங்கிவிட்டார்கள்.
இந்த பைக் டாக்ஸி சேவைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. ஆனால் மக்கள் குறைந்த கட்டணம் காரணமாக ஆட்டோவை புறக்கணித்துவிட்டு பைக் டாக்ஸியை தேர்வு செய்யும் நிலை உள்ளது. ஒருபக்கம் மக்களிடையே வரவேற்பு, மறுபக்கம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் என இரண்டு சிக்கல்களுடன் இந்த பிரச்சனை நீண்ட காலமாக இருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால் பைக் டாக்ஸிக்கு இந்தியாவில் முறையான அனுமதி இல்லை.
மோட்டார் வாகன சட்டத்தில் பைக் டாக்ஸி தொடர்பாக எந்த சட்டங்களும் இல்லை. இந்த பைக் டாக்ஸி எப்படி செயல்படுகிறது என்றால், தனிநபர்கள் யார் வேண்டுமானலும் எங்காவது வெளியில் செல்லும் போது, உடன் அழைத்து சென்றால் பணம் கிடைக்கும். இதை பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் பலர் செய்கிறார்கள்.. இவர்கள் பைக் டாக்ஸியை சேர்ந்தவர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்கவும் முடியாது. இதை கண்காணிப்பது எளிதானது அல்ல.. இதுதான் இதில் உள்ள நடைமுறைச் சிக்கல் ஆகும்.
இதினிடையே ராபிடோ, ஓலா போன்ற தனியார் நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவை காரணமாக எங்கள் குடும்பங்களை காப்பாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் வேதனையுடன் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பைக் டாக்ஸிக்கு இந்தியா முழுவதும் எங்குமே அனுமதி இல்லை.. இந்த பைக் டாக்ஸியை வைத்து இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பயணிகளிடம் ஏற்றி செல்வது என்பது வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. அதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவிற்கு இஎம்ஐ கட்ட முடியாமல், குடும்பத்தை பார்க்க முடியாமல், ரொம்ப சிரமமான கட்டத்தில் இருக்கிறோம்.. இந்த பைக் டாக்ஸி ஓட்டினால் உங்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்.. அப்படி சொல்லி, போலியான வாக்குறுதிகளை கொடுத்து, படித்த இளைஞர்கள் நிறைய பேரை ஒரு உறுதி இல்லாத தொழிலிலுக்கு இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அழைத்து வருகிறார்கள்..
இந்த பைக் டாக்ஸியால் நிறைய மரணங்கள் நடந்துள்ளது. பாலியல் தொல்லைகள் நடந்துள்ளன. எந்த ஒரு முறையான அனுமதியும் இன்றி, இந்த தொழிலை செய்து எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்குறாங்க.. பொதுமக்கள் ஆட்டோவில் மீட்டர் போட மறுப்பதாக எங்களை குற்றஞ்சாட்டுகிறார்கள்.. ஆனால் அரசு மீட்டர் கட்டணத்தை முறைப்படி நிர்ணயித்து, ஒழுங்குப்படுத்தினால் நாங்கள் அதன்படி ஆட்டோவை ஓட்ட தயாராக உள்ளோம்..
ஆன்லைன் முறையில் ஆட்டோ ஓட்டும் எங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களுக்கு 2013ல் அரசு நிர்ணயம் செய்த மீட்டர் கட்டணத்தை தான் தருகிறார்கள்.. அந்த கட்டணத்தில் தான் நாங்கள் ஆட்டோ ஓட்டுகிறோம்.. பைக் டாக்ஸிக்கு அனுமதியே இல்லாத நிலையில், பைக் டாக்ஸில் இரண்டு பேரை ஏற்றிச்செல்கிறார்கள்.. பெர்மிட்டே இல்லாமல் இந்த வேலையை செய்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications