வாரத்துக்கு 80 மணி நேரம் வேலை பார்த்த பில் கேட்ஸ்.. கோடீஸ்வரர் ஆனபிறகும் கோடிங் செய்தாராம்!
சென்னை: மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன பிறகும் வாரத்துக்கு 80 மணி நேரம் தான் வேலை பார்த்ததாக கூறியுள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ். சிறு தவறு நடந்தால் கூட, உலகளவில் தனது நிறுவனம் பெற்றுள்ள முதலிடம் பறிபோய்விடும் என பயத்துடன் இருந்ததாக பில்கேட்ஸ் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்கள், பில்லியனர் அந்தஸ்தை அடைந்த பிறகு, அவர்கள் உழைக்கும் வேகம் குறையக்கூடும். ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அப்படி இல்லை. மைக்ரோசாப்ட் இணை நிறுவனராக, பல நூறு கோடிக்கணக்கில் சொத்துகளை சேர்த்த பிறகும், உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவரான பிறகும் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்ததாக கூறியுள்ளார் பில்கேட்ஸ்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களால் அறியப்பட்டவர். பில்கேட்ஸ் என்று சொன்னாலே, அவரது செல்வச் செழிப்பும், தாராளமாக நிதி உதவி அளிக்கும் நல்ல மனமும்தான் நினைவுக்கு வரும். தனது 30-வது வயதுகளிலேயே உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆனவர் பில் கேட்ஸ். வரலாற்றிலேயே மிக இளம் வயதில் கோடீஸ்வரர் ஆனவர் பில் கேட்ஸ் தான்.
1975 ஆம் ஆண்டு தனது 20 வயதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கிய பில் கேட்ஸுக்கு இன்று 69 வயது. 1990களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பில்கேட்ஸ் உலகளவில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். இன்று அவர் உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இல்லை.
பில் கேட்ஸ் தனது நினைவுக் குறிப்பான 'சோர்ஸ் கோட்' (Source Code) புத்தகத்தில், தான் தொடர்ந்து வேலை செய்தது பற்றி விவரித்துள்ளார். அதாவது, வாரத்துக்கு 80 மணி நேரம் தான் உழைத்ததாகவும், கோடிங் செய்ததாகவும் கூறியுள்ளார். ஒரு சிறிய தவறு கூட மைக்ரோசாப்ட், இந்த உலகில் பிடித்துள்ள ஆதிக்கத்தை இழக்க நேரிடும் என்று தொடர்ந்து பயந்ததால் அதற்காகவே தொடர்ச்சியாக உழைக்க வேண்டி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது மைக்ரோசாப்ட் உலகின் மிகவும் மதிப்புமிக்க பொது நிறுவனமாக இருந்தது, அதே நேரத்தில் பில் கேட்ஸ் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். எனினும், தனது சிறு தவறு கூட கணினி புரட்சியில் மைக்ரோசாப்டின் நிலையை வீழ்த்திவிடக்கூடும் எனக் கவலைப்பட்டதாகவும், அதற்காகவே தொடர்ந்து உழைத்ததாகவும் கூறியுள்ளார்.
தான் ஒரு சிறு தவறு செய்தாலும், அது கணினி சந்தையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை வீழ்ச்சியடையச் செய்துவிடும் என பயந்ததை "நான் மரணத்திற்கு ஒரு தவறு தூரத்தில் இருந்தேன் என்று நினைத்தேன்" என்று கவித்துவமாகக் கூறியுள்ளார் பில் கேட்ஸ்.
உலகின் மிகப்பெரும் பில்லியனரான பிறகும் கூட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தான் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக உணரவில்லை, 1998ல் கூட நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என நிம்மதியாக உணர்ந்தேன் எனச் சொல்ல முடியாது. அப்போதும் நான் சாஃப்ட்வேர் கோடிங் செய்து கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார் பில் கேட்ஸ்.
இன்று, மைக்ரோசாப்ட்ன் மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம். அதே நேரத்தில் பில் கேட்ஸின் நிகர மதிப்பு 165 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications