யாரும் Half Boil சாப்பிடாதீங்க.. மா.சுப்பிரமணியன் கொடுத்த முக்கிய வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி பரும் சூழலில், பொதுமக்கள் யாரும் ஹாஃப் பாயில் சாப்பிட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் கோழிக்கறியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியம் என்று கூறியுள்ள மா.சுப்பிரமணியன், திடீரென உயிரிழக்கும் கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இவற்றின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுக்கு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டன.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக முழு கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு பணிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப பல்வேறு கோழிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் ஏராளமானோருக்கு திடீரென காய்ச்சல், சலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பறவை காய்ச்சல் பரவி வருவதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பறவை காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் வழங்கி இருந்தது. அந்த தகவல் கிடைத்தவுடன் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென உயிரிழந்தால், உடனடியாக ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பறவை காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்களில் யாருக்கும் இதுவரை பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேபோல் பொதுமக்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் ஹாஃப் பாயில் போன்ற உணவுகளை சில நாட்களுக்கு தவிர்ப்பது நல்லது. அதேபோல் கோழி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திடீரென உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் முட்டை, கோழிக் கறி, உணவகங்களில் சிக்கன் தொடர்பான உணவு உள்ளிட்டவற்றை தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு இப்படியான உணவை கொடுக்காமல் இருப்பது சரியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications