பெண்கள் மீது வன்மத்தை கக்கிய பிரியாணி மேன் அபிஷேக் ரபி வேறு வழக்கில் மீண்டும் கைது! நடந்தது என்ன?
சென்னை: பிரியாணி மேன் எனும் யூடியூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் ரபி என்பவர் மற்றொரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபர்களான இர்ஃபான் மற்றும் டெயிலர் அக்கா ஆகியோரை பிரியாணி மேன் அவதூறாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். மேலும் பெண்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் ஆபாசமாக கருத்துகளை வெளியிட்டு வந்ததால் அவர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் பிரியாணி மேன் கடந்த கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் கிறிஸ்தவர்களை அவதூறாக தனது சேனலில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் அபிஷேக் ரபி. யூடியூபர்கள் எளிதில் பிரபலமடைவதற்காக ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் யூடியூபர்களை அவதூறாக பேசி இவர்கள் பிரபலமடைவது. இதனால் இவர்களது ஆதரவாளர்களும் மோதிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் பிரபல யூடியூபரான இர்ஃபானை தனது வீடியோவில் பிரியாணி மேன் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு இர்பானின் கார் விபத்தில் சிக்கியதில் மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். அப்போது அந்த காரை இர்பான் ஓட்டவில்லை என்றும் அவருடைய உறவினர்தான் ஓட்டினார் என்றும் சொல்லப்பட்டது.
அது போல் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருந்த போது இர்பான் துபாயில் தனது குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை யூடியூபில் வெளியிட்டிருந்தார். இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இர்பானின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிறகு சுகாதாரத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இந்த விஷயத்தையும் கார் விபத்து விஷயத்தையும் கையில் எடுத்த பிரியாணி மேன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு இர்பானும் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அது போல் டெய்லர் அக்கா என்ற யூடியூப் சேனலில் டெய்லரிங் குறித்த பதிவுகளை பெண் ஒருவர் வெளியிட்டு வருகிறார். இவர் பிளவுஸ் தைத்து கொடுப்பதை பிரியாணி மேன் ஆபாசமாக வீடியோ வெளியிட்டிருந்தார். அது போல் எப்போதும் பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பது, செம்மொழி பூங்கா குறித்து ஆபாசம் கொப்பளிக்க பேசியிருந்தார். இதனால் பிரியாணி மேனை பலர் விமர்சித்திருந்தார்கள்.
இதையடுத்து அவர் யூடியூப்பில் கடந்த 29ஆம் தேதி இரவு நேரலையில் தற்கொலை செய்து கொள்வது போல் ஒரு வீடியோவை போட்டு தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றார். அப்போது நெட்டிசன்கள் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியதும், அவர் போய் காப்பாற்றியுள்ளார்.
சுமார் 3 மணி நேரமாக லைவில் அவர் இது போல் செய்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கடந்த ஜூலை 30 ஆம் தேதி கைது செய்தனர். அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications