பிறப்பு சான்றிதழ்..ரூ.2000 + ஆதார் கார்டு.. டைம் நெருங்குது மக்களே.. மொத்தமா மாறுதே.. என்னனு பாருங்க
சென்னை: செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரப்போகின்றன.. அவையெல்லாம் என்ன தெரியுமா?
பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கணக்குகளில் ஆதார் நம்பரை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

2000 நோட்டுக்கள்: அதேபோல, 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். மறுநாள், அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது. இதற்கு வேறு அவகாசமும் தரப்படவில்லை என்பதால், அதற்குள் எல்லாரும் வங்கிகளுக்கு சென்று மாற்றியாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில், பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த, காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மாற்றியமைக்க போகிறது.. இதற்கான புதிய அட்டவணையை வருகிற 1-ந்தேதி முதல் கொண்டுவரப்போகிறது.
போட்டோக்கள்: பத்திரப்பதிவு துறையிலும் புதிய மாற்றம் வரப்போகிறது.. அதாவது, ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த போட்டோக்களையும், ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது.. அக்டோபர் 1-ந்தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த போட்டோக்கள் ஆவணமாக இணைக்கப்பட உள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு திருத்தச்சட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரப்போகிறது.. இதன்மூலம் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும்..

லைசென்ஸ்: குறிப்பாக, மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் இப்படி அனைத்துக்குமே ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல, அரசு வேலைகளுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ,அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த அதிரடிகள் நடைமுறைக்கு வரஉள்ள நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகளிலும் ஏதாவது மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications