ஷேர் மார்க்கெட் காலி.. பிட்காயின் காலி.. ரொம்ப ரிஸ்க்.. தங்கம்தான் இப்போதைக்கு பெஸ்ட்.. முக்கியம்
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக பங்கு சந்தை மற்றும் பிட்காயின் இரண்டும் அடுத்தடுத்து சரிய தொடங்கி உள்ளது.
நேற்று Bitcoin (BTC) ஒரே நாளில் $80,000 க்கு கீழே சரிந்தது. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சில நாட்களில் 27% சதவிகிதம் வரை சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2800 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது.

1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 90 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது. உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின்.
இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.
பங்கு சந்தை சரிவு
டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக நாளுக்கு நாள் மார்க்கெட் மோசமாக சரிந்து வருகிறது. மார்க்கெட்டில் நிலையற்ற தன்மை உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்க மார்க்கெட்டில் 1.7 ட்ரில்லியன் டாலர் சரிந்து அழிந்து உள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ.14 கோடியே கோடி அழிந்து போய் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
மார்க்கெட் மோசம்
வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது.
அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.
81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
வர்த்தக போர் உச்சம்
இந்தியா, கனடா, சீனா, மெக்சிகோ, ஐரோப்பா, உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக டிரம்ப் வர்த்தக போரை அறிவித்துள்ளார். சீனாவிற்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போரை அறிவித்த நிலையில் அமெரிக்காவின் முடிவிற்கு பதிலடியாக சீனா பதில் வரியை விதித்து உள்ளது. அதன்படி டிரம்புக்கு பதிலடி கொடுத்தது சீனா. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு கூடுதல் 15% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக போரை அதிகாரபூர்வமாக டிரம்ப் தொடங்கி உள்ளார். அதன்படி மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்து அவர் உத்தரவிட்டு உள்ளார்
சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதலிடம் வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.
ஏற்கனவே அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீது 15% வரியை சீனா விதித்து உள்ளது, அதன் எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10% வரியை சீனா விதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையலாம். இதனால் அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
தங்கம்தான் பெஸ்ட்
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை..தங்கத்தை விட வேறு சிறப்பான முதலீடு இல்லை என்று உலக தங்க கவுன்சில் தலைவர் டேவிட் டெய்ட் கூறி உள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதில் இருந்து, தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு $2,900க்கு மேல் வர்த்தகம் செய்கிறது. இது 200 டாலர் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 3100 டாலர் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தங்கத்தின் விலை
தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications