அசைவற்று படுக்கையில் கிடந்த உருவம்.. பிட்ஸ் பிலானி ஹாஸ்டல் ரூமில் ஒரே டென்ஷன்! மீண்டும் கோவா மாணவர்
சென்னை: பிட்ஸ் பிலானி வளாகத்தில் படித்துவரும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது உயிருடன் இருக்கிறார்களா என்பதை சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லை.. இதுபோன்ற துயரங்களை தடுக்க வேண்டும்.. குறைகள் தீர்க்கப்பட வேண்டும்,.. பல மாணவர் இறப்புகளுக்கு வழிவகுத்த நிறுவனத் தோல்வி என்று அவர்கள் நம்புவதற்கு கல்லூரி பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் கோவாவின் பிரபலமான கல்லூரி மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ஒரு கொடுமை அந்த கல்லூரியில் நடந்து, பரபரப்பை தந்து வருகிறது.
கோவா மாநிலம் வாஸ்கோவில் பிட்ஸ் பிலானி தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதன் விடுதியில் தங்கி மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள்.

அந்தவகையில், இந்த கல்லூரியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த குஷ்கரா என்ற வயது 20 இளைஞர் 3ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு படித்து வந்துள்ளார்.
ஹாஸ்டல் வார்டன்
வெளிமாநிலம் என்பதால், இந்த கல்லூரியின் விடுதியில்தான் குஷ்கரா தங்கியிருந்தார்.. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி குஷ்கரா ஹாஸ்டல் ரூமில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.. மறுநாள் காலை வெகுநேரமாகியும் ரூமை குஷ்கரா திறக்காததால் சந்தேகமடைந்த சக ஹாஸ்ட்ல் மாணவர்கள், வார்டனுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த வார்டன், ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் குஷ்கரா சடலமாக கிடந்துள்ளார். அவரை மீட்ட மாணவர்கள், விடுதி காப்பாளர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குஷ்கராவை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

மர்மமான மரணங்கள்
இதையடுத்து, போலீஸ் விசாரணையும் ஆரம்பமானது.. முன்தினம் இரவு, குஷ்கரா பேட்மிண்டன் விளையாடிவிட்டு தூங்க போயிருக்கிறார்.. ஆனால், அவர் எப்படி இறந்தார் என்பது யாருக்குமே தெரியவில்லை..
எனவே இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தினர்.. இயற்கைக்கு மாறான மரணம் என்றும் வழக்கை பதிவு செய்தனர்.. சகமாணவர்கள் மற்றும் நிறுவன நிர்வாகத்தின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.. தூக்கத்திலேயே உயிர் போனதாக மருத்துவ அறிக்கையும் சொல்லியது. எனினும், குஷ்கராவின் மரணத்தின் மர்மம் அகலவில்லை என்கிறார்கள் சக நண்பர்கள்.
5வது மரணம்
காரணம், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் இருந்தே இப்படியான மரணங்கள் இங்கு நடைபெறுவதாக சொல்கிறார்கள்.. கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஓம் பிரியன் சிங் என்ற மாணவரும், கடந்த மார்ச் 2025-ல் அதர்வ் தேசாய் என்ற மாணவரும், கடந்த மே 2025-ல் கிருஷ்ணா கசேரா என்ற மாணவரும், இதே ஹாஸ்டல் ரூம்களில் இறந்து கிடந்தனர்.. அந்தவகையில் குஷ்கராவின் மரணம் 4வது மரணமாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைய தினம் 5வது மரணமும் அதே ஹாஸ்டலில் விழுந்துள்ளது.. ரிஷி நாயர் என்ற மாணவர், காலை 10.45 மணியளவில் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருடைய செல்போனை தொடர்பு கொண்டபோது, பதில் எதுவும் வரவில்லையாம்..
படுக்கையில் அசைவின்றி
இதனால் பதறிப்போன அதிகாரிகள், உடனடியாக ஹாஸ்டல் ரூம் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, படுக்கையில் அசைவின்றி ரிஷி நாயர் கிடந்துள்ளார். இவரும் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை..
இந்த மரணத்திற்கான காரணம் பற்றி விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தனியார் பல்கலைக்கழகம் முறைப்படியான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. குறுகிய காலகட்டத்தில் 5 மரணங்கள், இதே ஹாஸ்டலில் நடந்துள்ளது, மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் உண்டுபண்ணி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications