பொய்! நடிகர் சித்தார்த்தை விமானத்தில் பயணிக்க தடை விதிக்கணும்! அமைச்சரிடம் பாஜக நிர்வாகி புகார்
சென்னை: நடிகர் சித்தார்த்தும் அவரது குடும்பத்தினரும் இரு ஆண்டுகள் விமான பயணம் செய்ய தடை கோரி மத்திய இணையமைச்சரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். அது போல் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு வீரர்கள் இந்தியில் பேசச் சொல்லி தமது பெற்றோரை வற்புறுத்தியதாக சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். மேலும் அவர்கள் ஆங்கிலத்தில் பேச மறுத்ததாகவும் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது பெற்றோரை 20 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் காக்க வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை விமான நிலைய நிர்வாகத்தினர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை எம்பி சு வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

பரபரப்பு
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் இந்தி பேசத் தெரிந்த சித்தார்த் வேண்டுமென்றே தமிழகத்தில் மொழி பிரச்சினையை உருவாக்குகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரு ஆண்டுகள் விமான பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங்கிற்கு பாஜக மாநில நிர்வாகி புகார் மனு அளித்துள்ளார்.

சங்கர் பாண்டி
பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலப் பிரிவு செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி புகார் மனுவை அளித்தார். இந்த புகார் மனுவை அளித்து குறித்து செய்தியாளர்களை சந்தித்த சங்கர் பாண்டி கூறுகையில் சித்தார்த் நன்றாக இந்தி பேசக் கூடியவர். அவரது குடும்பத்தினரும் இந்தியில் பேசுவார்கள். அப்படியிருக்கும் போது வேண்டுமென்றே நடிகர் சித்தார்த் இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாக பதிவு போட்டிருந்தார்.

தமிழ் பேசும் அதிகாரிகள்
ஆனால் அன்றைய தினம் விமான நிலையத்தில் பணியில் இருந்தவர்கள் தமிழ் பேசக் கூடிய தமிழகத்தை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். எனவே மொழி பிரச்சினையை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகள் விமான பயணத் தடைவிதிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

விளம்பர நோக்கம்
அது போல் விளம்பர நோக்கத்துக்காகவே நடிகர் சித்தார்த் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. அந்த புகாரில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சித்தார்த்தின் பெற்றோரின் உடமைகளை சோதனை செய்தார். அப்படியிருக்கும் போது அவர் ஏன் இந்தியில் பேச சொல்லி இவர்களை வற்புறுத்த வேண்டும் என இந்து மக்களள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு மீது விமர்சனம்
நடிகர் சித்தார்த் அண்மைக்காலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். கொரோனா காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நிறைய பேர் உயிரிழந்தனர். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ அது போல் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எங்கும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மிகவும் காட்டமாக நடிகர் சித்தார்த் பதிலளித்திருந்தார். பின்னர் திமுக ஆட்சி அமைந்தவுடன் நடிகர் சித்தார்த்தை காணவில்லை என நெட்டிசன்கள் கிண்டலாக பதிவு போட்டிருந்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications