அதிமுகவில் வெடிக்கிறது பூகம்பம்... கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி பயணம்?
சென்னை: அண்ணா திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் விவகாரத்தில் டெல்லி பாஜக மேலிடத்தின் நிபந்தனைகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்து வரும் நிலையில் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் செல்ல இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வரும் கே.ஏ.செங்கோட்டையன் தற்போது கோபிச்செட்டிபாளையத்தில் இருக்கிறார். அவருக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு தரக் கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இன்று இரவு கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கே.ஏ.செங்கோட்டையன் கடந்த வாரம்தான் டெல்லிக்கு ரகசியமாக சென்று திரும்பினார். அதுவும் அதிமுக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய நிலையில் செங்கோட்டையன் டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார் செங்கோட்டையன்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது பாஜகவின் நிபந்தனை; இதனை ஏற்க முடியாது என்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஆனால் பாஜகவோ, ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைவதுதான் கணிசமான வாக்குகளை வெல்ல உதவும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை அகற்றிவிட்டு செங்கோட்டையனை பொதுச்செயலாளராக்கும் முயற்சிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. செங்கோட்டையனின் டெல்லி பயணத்தின் போதும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் செங்கோட்டையனுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு தருகிறது என்கிற தகவல்கள் வெளியாகின. மேலும் தற்போது, கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல இருக்கிறார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். செங்கோட்டையனின் அடுத்தடுத்த டெல்லி பயணங்கள், அதிமுகவில் மிகப் பெரிய பூகம்பம் வெடிக்கப் போவதற்கான முன்னோட்டமாகவே பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications