ட்ரோல் செய்யப்படும் அமர் பிரசாத் ரெட்டி.. சந்திராயன் 3 சிவலிங்கம் போல் இருக்காமே? அடடே கண்டுபிடிப்பு
சென்னை: சந்திராயன் 3 விண்கலத்தை நிலவை நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவி சாதித்து இருக்கும் நிலையில், பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி அது சிவலிங்கம்போல் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருப்பார்.
பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. அண்ணாமலையின் வலதுகரம் என்று அழைக்கப்படும் இவர் ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் அதிகளவில் விமர்சிக்கவும், விவாதிக்கப்படவும் செய்கிறது. அந்த வகையில்தான் தற்போது அவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இம்முறை அவர் வெளியிட்ட பதிவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 குறித்தானது. ஆம், சந்திராயன் 3 விண்கலம் ஏவப்படுவதற்கு முன் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட்டுடன் நிறுத்தப்பட்டபோது எடுத்த படத்தை பகிர்ந்து ஹர ஹர மஹாதேவ் என்று பதிவிட்டு உள்ளார்.
அவர் பகிர்ந்த ராக்கெட் புகைப்படத்தில், சிவலிங்கம்போன்றும் பட்டையை தேசியக்கொடி நிறத்திலும் வரைந்து உள்ளார். அப்பதிவுக்கு கீழே பல்வேறு தரப்பினர் அவரை ட்ரோல் செய்து கருத்திட்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக ஒருவர் அதே படத்தை சிலுவைபோல் வரைந்து "இது எப்படி?" என்று கேட்டு உள்ளார்.

இன்னும் பல அமர் பிரசாத் ரெட்டியின் இந்த பதிவுக்கு கீழே கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து உள்ளார்கள். ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் நிலவில் விண்கலம் அமைத்த 4 வது நாடாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ போராடி வருகிறது. 2008 ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 1 விண்கலம் தோல்வியடைந்தது.
சந்திராயன் 2 விண்கலம் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட ரோவர் கருவி தரையிறங்கும்போது மோதியதால் வெடித்து சிதறி தோல்வியடைந்தது. இதனை அடுத்து சந்திராயன் 3 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று மதியம் 2.35 மணிக்கு இந்த சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

நிலவின் இருண்ட பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தை நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்குகிறதா என இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்கானித்து வருகிறார்கள். ஒரு மாதம் கழித்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்த சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து சந்திராயன் 3 செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ கூறி உள்ளது. இந்த விண்கலம் 5 முறை பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றி வந்த பிறகு நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் சென்று அதையும் நீள் வட்டப்பாதையில் சுற்றி தரையிறங்கும். இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முதல்முறை பூமியின் நீள் வட்டப்பாதையை சந்திராயன் 3 விண்கலம் சுற்றி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications