திட்டி திட்டி.. ஒரு வழியாக.. அமித்ஷா வாயிலும் விழுந்த உதயநிதி..!
உதயநிதி ஸ்டாலின் குறித்து அமித்ஷா தன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்
சென்னை: திட்டி திட்டியே, ஒருவழியாக அமித்ஷாவையே தன்னை பற்றி பேச வைத்து வைத்துவிட்டார் உதயநிதி.. அனல்தெறிக்கும் பேச்சு ஒரு புறம் என்றால், தழைத்தோங்கும் மனிதநேயம் மற்றொரு புறம் என டாப் கியர் போட்டு மேலே வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
உதயநிதியை பொறுத்தவரை இப்போதுவரை எதிர்க்கட்சிகளின் வாயில் விழுந்து கிடப்பவர்கள்.. அவ்வளவு ஏன், திமுகவில் சில சீனியர்களின் பொருமல்களுக்கும் ஆளாகி கிடப்பவர்.
ஏற்கனவே வாரிசு பிரச்சனை விவகாரம் திமுகவில் இருக்கும்போது, உதயநிதிக்கு இப்போது சீட் தர வேண்டுமா என்ற சர்ச்சைகளையும் தாண்டி, சேப்பாக்கத்தில் களம் காண்கிறார்..

பாமக
இவருக்கு சாதகமாகவே இப்போது வரை தொகுதி உள்ளது.. தெரிந்தோ, தெரியாமலோ, சேப்பாக்கத்தை அவ்வளவாக பலம் இல்லாத பாமகவுக்கு ஒதுக்கியுள்ளதால், உதயநிதியின் வெற்றி உறுதியாகி கொண்டே போகிறது... எனினும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் முயற்சியை மிக தீவிரமாக கையில் எடுத்து வருகிறார்.

யதார்த்தம்
மற்றொரு பக்கம் தன்னுடைய பிரச்சாரத்தை ஒருவித எதிர்பார்ப்புக்குரிய வகையிலேயே உதயநிதி வைத்துள்ளார்.. இதற்கு காரணம் இவரது பிரச்சாரம் புதுமாதிரியாக இருக்கிறது.. நீட்டி முழக்கி எதையும் பேசுவதெல்லாம் இல்லை.. தூய தமிழில் மேடை போட்டு முழங்குவதெல்லாம் இல்லை.. சிம்பிள் & கிரிஸ்பியாக எளிய மக்கள் புரிந்து கொள்ளும்படி யதார்த்தமாக பேசுகிறார்.. அது அதிமுகவாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி.

விமர்சனம்
பாஜகவை விமர்சிப்பது என்றால் கொஞ்சம் கூடுதல் குஷியாகி விடுகிறார் உதயநிதி.. அதிலும் இங்கிருக்கும் பாஜக தலைவர்களை பற்றியெல்லாம் பேசுவதில்லை.. ஸ்டிரைட்டா டெல்லிதான்.. பிரதமர், அமித்ஷா என்று மேலிட தலைவர்களை இழுத்து வைத்து கொண்டு பேசுகிறார்.. பிறகு திடீரென எய்ம்ஸ் செங்கலை தூக்கி மக்களிடம் காட்டுகிறார். அந்த வகையில் உதயநிதியின் பிரச்சார ஃபார்முலா ஸ்டாலினைவிட சிறப்பாகவே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

தாக்கம்
அதன் தாக்கம் இன்று அமித்ஷா பேசுவதிலேயே தெரிய முடிகிறது.. விழுப்புரத்தில் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்த அமித்ஷா, பெண்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.சோனியா காந்திக்கு ராகுலைப் பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியைபற்றியும்தான் கவலை என்று குறிப்பிட்டார்.. இது உதயநிதியின் அரசியல் ரீச்சைதான் எடுத்து காட்டுகிறது..!
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications