விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்!
சென்னை: கோடை வெப்பத்தையும் விட தமிழகத் தேர்தல் களம் சூடுப் பிடித்திருக்கிறது. கடும் வெப்பத்தையும் மீறி ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள் அரசியல் கட்சிகள். அதேசமயம், திமுக, அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் தொகுதி நிர்வாகிகளும் படு சுறுசுறுப்பாக களத்தில் நின்றாலும், தினசரி செலவுக்கான பணம் இன்னும் வரவில்லையே என்கிற புலம்பல் களும் அதிகரித்தே இருக்கிறது.
திமுக, அதிமுகவை பொறுத்தவரை, பூத் கமிட்டிக்கான செலவுகளை அவ்வப்போது சரியான நேரத்தில் கொடுத்து விடும். அப்படித்தான் கொடுக்க ப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு 1 வாரம் இருக்கும் நிலையில், இரண்டு கட்டமாக பூத் செலவுகளுக்கான தொகை அனுப்பி வைக்கப்படும். ஆனால் கடைசி 1 வாரத்திற்கான முதல் கட்ட தொகை வராததால் அதை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், இதனை அறிந்த திமுக, அதிமுக இரண்டு தரப்பும், கடைசி வாரத்தின் முதல் கட்ட தொகையாக தொகுதிக்கு 2 கோடிகளை அனுப்பி வைத்துள்ளன. அந்த கரன்சிகள் பூத் கமிட்டிகளுக்கு தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனால், திமுக, அதிமுக இரு கட்சிகளின் தொண்டர்களிடமும் உற்சாகம் மீண்டும் வந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் கரன்சி பாய்ச்சல் ஏகத்துக்கும் இருக்கிறது.
இதற்கிடையே, தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசில் பூத் கமிட்டி செலவுகளுக்கு பணம் போய்ச்சேராததால், அக்கட்சிகளின் தொண்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். இதனை பாஜகவின் டெல்லி தலைமைக்கு தெரியப்படத்தப்பட்டதும், ஏற்கனவே பாஜக போட்டியிடும் 27 தொகுதிக்கும் தலா 5 சி என முடிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டதே, அது என்னாச்சு? என மாநில தலைவர் நயினாரிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு நயினார் நாகேந்திரன், தொகுதி பொறுப்பாளர்களிடம் கொடுக் கப்பட்டு அவரது மேற்பார்வையில் செலவுகள கவனிக்கச் சொன்னதில், அவர்கள் முறையாக கையாளாமல் சொற்ப பணத்தை மட்டுமே கொடுத்துள் ளனர். அது 2 நாட்களுக்கு மட்டும் தான் வந்துள்ளது. மீண்டும் பொறுப்பாளர்கள் தராமல் காலம் தாழ்த்துவதால்தான் இந்த குமுறல்கள் வந்துள்ளது. அதேபோல, வி.ஐ.பி. கேண்டிட்டேட்களுக்கு அவர்களிடமே தொகையை தந்து செலவுகளை பார்க்கச் சொன்னதால், அவர்கள் தொகுதி நிர்வாகிகளிடம், செலவுகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் ; மேலிடத்தில் இருந்து வந்ததும் தருகிறோம் என சொல்லி வருவதால், நிர்வாகிகள் நொந்து போயிருக்கிறார்கள். மேலிடத்திலிருந்து அப்சர்வர்களை நியமித்து இதனை கவனிக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் வி.ஐ.பி. கேண்டிடேட்டுகள் பணத்தை வெளியே எடுப்பார்கள் என்று விளக்கமளித்திருக்கிறாராம்.
பாஜகவின் பணப்பட்டுவாடா விவகாரம் இப்படியிருக்க, காங்கிரசில் அது கூட நடக்கவில்லையாம். காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும், தேர்தல் செலவுகளுக்கு கட்சியிலிருந்து எந்த கவனிப்புமே இல்லையே...என செல்வப் பெருந்தகையிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், காங்கிரஸ் தொகுதி களையும் திமுக பார்த்துக்கொள்ளும். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என திமுக வாக்குறுதி தந்திருக்கிறது. அதனால், ஓட்டு சேகரிப்பில் கவனம் செலுத்துங்கள். திமுக எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் என சொல்ல, செம டென்சனாகியிருக்கிறார்கள் காங்கிரஸ் கேண்டிடேட்டுகள்.
இந்த விசயம் கே.சி.வேணுகோபாலின் கவனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. க்கள் சிலர் கொண்டு போக, வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது, இவர் கோடீஸ்வரர்; இவர் கோடீஸ்வரருக்கும் மேலே. அதனால் தேர்தல் செலவு களை கட்சியிடமிருந்து எதிர்பார்க்கமாட்டார்கள்.
20 முதல் 30 கோடி வரை செலவு செய்வார்கள். இப்படி செலவு செய்ய தயாராக இருந்தால் தான் இந்த தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்றெல்லாம் சொல்லித் தானே வேட்பாளர் களுக்கு மாநில தலைவர் (செல்வப்பெருந்தகை) சிபாரிசு செய்தார். இப்போ, கட்சியிலிருந்து பணம் எதிர்பார்த்தால் எப்படி ? தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்று கோபப்பட்டுள்ளார். தற்போது, தேர்தல் செலவு தொடர்பான ரகளைகள் காங்கிரஸில் கொடிக்கட்டிப் பறக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்
-
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
Election Exclusive: ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல..அம்பத்தூரில் அய்யாவுக்கு ஆப்பு! மது குடிப்போர் கையில் சிலிண்டர் -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ்












Click it and Unblock the Notifications