சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம்! ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா!

Google Oneindia Tamil News

சென்னை: தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைப்பதே அரிது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மாதம் 11 தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

இதில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என கூறி வருகின்றன.

பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா? பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா?

பாஜகவை தடுக்க

பாஜகவை தடுக்க

இந்நிலையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மற்றக்கட்சி தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

வாய்ப்பு எப்படி?

வாய்ப்பு எப்படி?

இந்நிலையில் தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் பாஜகவுக்கு வாய்ப்பு எப்படி உள்ளது? கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன என்பதை பார்ப்போம். தெலுங்கானாவில் 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது.

காங்., பாஜக தலா 1 இடம்

காங்., பாஜக தலா 1 இடம்

டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பின்படி தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரே ஒரு இடம் தான் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் சந்திர சேகர் ராவின் டிஆர்எஸ் கட்சிக்கு 14 இடங்கள் கிடைக்கும் என்றும் இதர கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடமும் இல்லை

ஒரு இடமும் இல்லை

இதேபோல் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு இடையேதான் போட்டியுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 இடங்களையும் தெலுங்குதேசம் கட்சி 17 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றக்கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

உற்றுநோக்கப்படும் சாணக்யா

உற்றுநோக்கப்படும் சாணக்யா

2014ஆம் நாடாளுமன்ற தேர்தலில் சாணக்யா கருத்துக்கணிப்பு அப்படியே இருந்ததால் இம்முறை அதன் கருத்துக்கணிப்பு உற்று நோக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும என சாணக்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Today's Chanakya exit poll says BJP and Congress will get each one seat in Telangana. In Andhra it will not get that too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X