பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
சென்னை: பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பாஜக தோற்கும் என்று சொல்லவில்லை. பாஜக ஜெயிக்க கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக புதிய பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. வேறு யுக்திகள் வேலைக்கு ஆகாத காரணத்தால் மோடி பிரச்சார யுக்தியை மாற்றி உள்ளார். தீவிரமாக மத ரீதியான தாக்குதல்களில் பாஜக குதித்து உள்ளது.

ராஜஸ்தானில் மோடி பேச்சு: முக்கியமாக பிரதமர் மோடி நேரடியாக மத ரீதியாக பேச தொடங்கி உள்ளார். ராஜஸ்தானில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
கடுமையான சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.
மோடி பேச்சு விமர்சனம்; மோடியின் இந்த பேச்சு தொடர்பாக என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் தகவல்களை திரித்து பேசுகிறார் மோடி. இந்து பெண்களின் தாலியை பறிக்க போகிறார்கள் என்று மோடி பொய் சொல்கிறார். பச்சையாக பொய் சொல்கிறார். இல்லாத விஷயங்களை பற்றி பேசி.. தவறாக பேசுகிறார். அவரால் பாஜகவின் வாக்குறுதிகளை பற்றி பேச முடியாது. அங்கே பேச ஒன்றும் இல்லை.
10 ஆண்டு சாதனைகள் பற்றி பேசியும் கூட வாக்குகளை கேட்க முடியவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் தகவல்களை பொய்யாக மாற்றி மாற்றி மோடி பேசுகிறார். யாரும் பேச தயங்கும் பொய்யான தகவல்களை மோடி பேசுகிறார். பிடிஆர் ரெஸ்ட் இன் பீஸ் என்று போட்டு இருந்தார். அது நியாயம்தான். அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.
தேர்தல் ஆணையம் செத்து போய்விட்டது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் சுயமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி, அமித் ஷா பேசிவிட்டனர். அடுத்து இன்னும் பலரும் பேசுவார்கள். தோல்வி உறுதி என்று தெரிந்தால் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இன்னும் 6 பேஸ் இருக்கிறது. இதில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
இது பாஜகவின் கடைசி அஸ்திரம். பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பாஜக தோற்கும் என்று சொல்லவில்லை. பாஜக ஜெயிக்க கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது , என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications