தமிழக நிதியமைச்சர் தெளிவான மனநிலையோடு இருக்கணும்.. "இவரை" போலவா?.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்
சென்னை: தமிழகத்தின் நிதி நிலையை கையாளும் ஒரு அமைச்சர் தெளிவான மனநிலையும் நிலையான அறிவும் இருக்க வேண்டும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தெளிவில்லாத மனநிலையுடன் இருக்கும் ஒருவருடன் மற்றவர்களை பணியாற்ற அனுமதித்தால் அது ஆபத்தில் போய் முடிந்து விடும் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
லக்னோவில் கடந்த வாரம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாமல் அந்த துறையின் செயலாளரிடம் அறிக்கையை கொடுத்து அனுப்பியுள்ளார்.

பிடிஆர் கூட்டம்
பின்னர் தான் ஏன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தையும் செய்தியாளர்கள் சந்திப்பில் பிடிஆர் கூறிவிட்டார். எனினும் கடந்த சில தினங்களாக பிடிஆர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் கொந்தளிக்கும் பிடிஆர் ஆத்திரத்தில் தகாத வார்த்தைகளை பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பரப்புவோர்
மேலும் தன்னிடம் கேள்வி கேட்கும் நபர்களின் ட்விட்டர் கணக்குகளை பிளாக் செய்து வருகிறார். பொய்யான தவறான தகவலை வேண்டுமென்றே பரப்புபவர்களைத்தான் அவர் பிளாக் செய்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் யாரோ ஒருவரை பெயரை குறிப்பிடாமல், "2 கிலோ இறால் மீனுக்கு விலை போகக் கூடியவர், வயதான முட்டாள், இதுவரை இரு முறை கட்சி பதவிகளிலிருந்து நீக்கப்பட்டவர்" என்று பிடிஆர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்கிரீன் ஷாட்
எனினும் போட்ட மாத்திரத்தில் அந்த ட்வீட்டை பிடிஆர் நீக்கியும் விட்டார். இதை பாஜகவினர் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்து வருகிறார்கள். நீக்கப்பட்ட இந்த ட்வீட்டை போட்டு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் கூறுகையில் பிடிஆர் நீங்கள் எனக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும். ட்விட்டரிலிருந்து உங்களை நீங்களே பிளாக் செய்து கொள்ளுங்கள். நான் ஏன் சொல்கிறேன் என்றால் உங்களால் 8 கோடி தமிழக மக்களையும் பிளாக் செய்ய முடியாதல்லவா அதனால் கூறுகிறேன் என காயத்ரி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பதிலடி
அது போல் பிடிஆரால் நீக்கப்பட்ட ட்வீட்டை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் தமிழக நிதிநிலையை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர் தினமும் தனது பணிகளை செவ்வனே செய்யவும் திடமான முடிவுகளை எடுக்கவும் அந்த நபர் தெளிவான மனநிலையுடனும் நிலையான அறிவுடனும் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறோம். ஆனால் இவரை போல் தன்னுடன் பணியாற்றுவோருக்கும் தமிழகத்தின் பொருளாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவரை முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக்கியிருக்கக் கூடாது. அவர் எப்படி செயல்படுகிறார் என்பது தனது ட்வீட்டை தானே டெலிட் செய்ததற்கான சாம்பிளாகும் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications